சிம்பு நடன ஸ்டெப் கடினமாக இருக்குமா? மாஸ்டர் ஒபன்டாக்..

by Chandru, Nov 25, 2020, 12:26 PM IST

நடிகர் சிம்பு நடனம் ஆடுவதில் கெட்டிக்காரர் எவ்வளவு கடினமான ஸ்டெப்பாக இருந்தாலும் மறுக்காமல் ஆடுவார். அதுவும் நடன இயக்குனர் ராபர்ட் மாஸ்டர் சிம்புவுக்கு அமைக்கும் நடன ஸ்டெப்கள் கடினமாக இருக்கும் என்பது எல்லோருக்கும் தெரியும். அதையும் சர்வ சாதாரணமாகச் சிம்பு ஆடிவிடுவார். சுசீந்திரன் இயக்கி உள்ள ஈஸ்வரன் படத்தில் சிம்புவுக்கு ராபர்ட் மாஸ்டர் ஒரு பாடலுக்கு நடனம் அமைத்திருக்கிறார்.

இதுபற்றி ராபர்ட் கூறும்போது.சிம்புவுக்கு நிறைய நடன காட்சிகளில் கடினமான ஸ்டெப்ஸ் தந்திருக்கிறேன் அதையெல்லாம் ஆடி இருக்கிறார். ஈஸ்வரன் படத்தை பொருத்தவரை சிம்புவுக்கு கடினமான ஸ்டெப்ஸ் எதுவும் தரவில்லை. சாதாரண ஸ்டெப்ஸ்தான் தந்திருக்கிறேன். ஆனால் மாநாடு படத்தில் சிம்புவுக்கு நடனம் அமைக்கிறேன் என்றார்.

ராபர்ட் சொல்வதைப் பார்த்தால் ஈஸ்வரன் படத்தில் கிராமத்துப் பின்னணிக்கு ஏற்ப நடனம் இருக்கும் மாநாடு படத்தில் அதிரடி நடனம் இருக்கும் என்று தெரிகிறது.
ஈஸ்வரன் படம் ஷூட்டிங் முடிந்து டப்பிங்கும் முடிந்திருக்கிறது, பொங்கல் தினத்தில் படம் திரைக்கு வருகிறது. இப்படத்தில் சிம்பு, பாம்பு பிடிக்கும் மோஷன் போஸ்டர் வெளியானது. அது சர்ச்சையானது. வனத்துறை அதிகாரிகள் படக் குழுவுக்கு நோட்டீஸ் அனுப்பினர். அதற்கு இயக்குனர் சுசீந்திரன் நேரடியாக சென்று செய்முறை விளக்கமும் பாம்பு பிடிக்கும் கிராபிக்ஸ் காட்சிகளும் அளித்தார். அதை ஏற்றுக்கொண்டு சிம்பு படத்தில் பிடித்தது ரப்பர் பாம்பு என்று வன அதிகாரி விளக்கம் அளித்தார். அத்துடன் அந்த பிரச்சனைக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டது.

More Cinema News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்