சுரங்கத்தில் சூழ்ந்தது மழைநீர் : நெய்வேலியில் நிலக்கரி எடுக்கும் பணி நிறுத்தம்

by Balaji, Nov 25, 2020, 16:50 PM IST

நெய்வேலி நிலக்கரி சூழ்நிலைகளில் மழைநீர் சூழ்ந்ததால் நிலக்கரி எடுக்கும் பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது இதன் காரணமாக மின் உற்பத்தியும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.நிவர் புயல் காரணமாகக் கடலூர் மாவட்டம் முழுவதுமாக தற்போது மழை பெய்து வருகிறது. நெய்வேலி என்எல்சியில் முதல் சுரங்கம், முதல் சுரங்க விரிவாக்கம், இரண்டாவது சுரங்கம் என மூன்று திறந்த வெளி சுரங்கங்கள் தற்போது இயங்கி வருகிறது. இந்த மூன்று சுரங்களிலும் மழை நீர் சூழ்ந்து உள்ளது . இதன் காரணமாக நிலக்கரி வெட்டி எடுக்கும் பணி முழுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

தற்போது சேமிப்பில் உள்ள நிலக்கரியைக் கொண்டு மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது.நெய்வேலி என்எல்சி அனல் மின் நிலையத்தில் 4,490 மெகாவாட் மின் உற்பத்தி செய்து வந்த நிலையில் முதல் அனல்மின் நிலையத்தின் ஆயுள் காலம் முடிவடைந்ததால் அது மூடப்பட்டுள்ளது.இரண்டாவது அனல் மின் நிலையத்தில் விபத்து ஏற்பட்டதால் அதுவும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

More Tamilnadu News


அண்மைய செய்திகள்