சிவ­காமி அம்­மை­யார் நினைவு பெண் குழந்­தை­கள் பாது­காப்பு திட்டம்!

இந்தத் திட்­டத்­தின் மூலம் பெண் குழந்தை பிறந்­தால், அக்குழந்தை பெய­ரில் 50 ஆயி­ரம் ரூபாய் செலுத்தப்படும். இத்திட்டத்துக்கு பொது சேவை மையத்தில் விண்ணப்பிக்கலாம்.
பெண் குழந்தை 1-08-2011க்கு முன்பு பிறந்த குழந்தையாக இருந்தால் 25,000 ரூபாய் வழங்கப்படும்.

உங்கள் பெண் குழந்தை 1-8-2011க்கு பிறகு பிறந்தக் குழந்தையாக இருப்பின் 50,000ரூபாய் வழங்கப்படுகிறது. இதில் 1-8-2011 அன்றோ அதற்கு பிறகோ பெண் குழந்தை பிறந்திருக்க வேண்டும். குடும்பத்திற்கு ஒரே பெண் குழந்தையாக இருந்தால், அக்குழந்தையின் நிலையான வைப்புத் தொகையான 50,000 ரூபாய் தமிழ்நாடு மின் விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் முதலீடு செய்யப்பட்டு, அக்குழந்தையின் பெயரில் ரசீது வழங்கப்படுகிறது.

இந்த வைப்புத்தொகை ஒவ்வொரு 5 ஆண்டிற்கும் புதுப்பிக்கப்பட்டு, 18 வருடங்கள் நிறைவடைந்ததும், அப்போதைய வட்டி விகிதத்துடனும், கல்வி ஊக்கத்தொகையுடனும் கூடிய முதிர்வு தொகை, அக்குழந்தைக்கு மேம்பாட்டு நிறுவனத்தினால் காசோலையாக வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தின்கீழ் பயன்பெற பெற்றோரில் ஒருவர் 35 வயதுக்குள், அரசு மருத்துவமனையில் கருத்தடை செய்ததற்கான சான்று அளிக்க வேண்டும்.

பெண் குழந்தை மட்டுமே இருக்க வேண்டும். ஆண் வாரிசு இருக்கக் கூடாது.

ஆண்டு வருமானம் ரூ. 72,000க்குள் இருக்க வேண்டும்.

இரண்டாவது குழந்தைக்கு 3 வயது முடிவதற்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் இத்­திட்­டத்­தின் மூலம் பலன் பெற்­ற­வர்­கள் பின்­னா­ளில் ஆண் குழந்­தையை தத்து எடுத்­துக் கொள்­ளக் கூடாது.

இதற்­கான விண்­ணப்­பம் ஒவ்­வொரு மாவட்ட சமூக நல அலு­வ­ல­கத்­தில் கிடைக்­கி­றது. அவ்­வாறு இல்­லை­யென்­றால் http://cms.tn.gov.in/sites/def/ault/files/forms/socialwelfareschemes.pdf என்ற இணைய தள முக­வ­ரிக்கு சென்று டவுன்­லோட் செய்து கொள்­ள­லாம். பின்­னர் விண்­ணப்­பத்தை பூர்த்தி செய்து அவற்­றில் குறிப்­பிட்­டுள்ள உறு­தி­மொழி சான்­றி­தழ்­களை இணைத்து மாவட்ட சமூக அலு­வ­ல­ரி­டம் கொடுக்க வேண்­டும்.

இந்த திட்டத்தில் பயன்பெற மாவட்ட சமூ­க­நல அலு­வ­லர், மாவட்ட திட்ட அலு­வ­லர்­கள் ( ஒருங்­கி­ணைந்த குழந்தை வளர்ச்சி திட்­டம் ), குழந்தை வளர்ச்சி திட்ட அலு­வ­லர்­கள், விரி­வாக்க அலு­வ­லர்­கள்( சமூக நலம் ), ஊர் நல அலு­வ­லர்­களை அனுகவேண்டும்.

Advertisement
மேலும் செய்திகள்
actress-mahalakshmi-s-husband-ravinder-is-in-trouble-again
சிக்கிய பென் டிரைவ்,ஆவணங்கள்... நடிகை மகாலட்சுமியின் கணவர் ரவீந்தருக்கு மீண்டும் சிக்கல்
he-broke-his-promise-so-we-broke-up-ramarajan-open-talk-on-nalini
சத்தியம் செய்ததை மீறினார்... அதனால் பிரிந்தோம்- நளினி குறித்து ராமராஜன் ஓபன் டாக்
hospital-built-by-napoleon-grandfather-greeted-the-boy
நெப்போலியன் கட்டிய மருத்துவமனை... நீ நடப்பாய் சிறுவனை வாழ்த்திய பெரியதம்பி தாத்தா.... வாக்கு பலித்த அதிசயம்
prime-minister-light-house-plan-chennai
பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்
singarach-chennai-2-0-football-ground-laid-foundation
“சிங்காரச் சென்னை 2.0” செயற்கை புல் கால்பந்து மைதானம்
new-restriction-imposed-from-tomorrow
இதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா? – புதிய கட்டுப்பாடுகள் என்ன?
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
local-trains-doesn-t-function-from-tomorrow
புறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!