அடுக்கடுக்கடுக்காக 2ம்பாகம் படங்கள் உருவாகிறது..

by Chandru, Nov 26, 2020, 22:17 PM IST

அடுத்த சீசன் இதுதான் போல..ஒரு சில படங்கள் பெரிய வெற்றி அடைந்ததும் அதன் 2ம் பாகத்தை ரசிகர்கள் எதிர்பார்ப்பது வழக்கம். அதுபோல் இரண்டாம் பாகம் வந்து வெற்றி பெற்ற படங்கள் உண்டு லாரன்ஸ்ன்ஸ் நடித்த காஞ்சனா அடுத்தடுத்த பாகங்கள் வெளியாகின, சூர்யா நடித்த சிங்கம் படம் 3 பாகம் உருவானதும் சாமி இரண்டு பாகம் உருவானது, சண்டகோழி படம் 2 பாகம் வெளியானது, அடுத்து சூப்பர் ஸ்டார் நடித்த சந்திரமுகி 2ம்பாகம் உருவாகிறது. ஆனால் இதில் ரஜினி நடிக்கவில்லை ராகவா லாரன்ஸ் நடிக்கிறார்.

80களில் வெளியான முந்தானை முடிச்சி 2ம் பாகம், சம்சாரம் அது மின்சாரம் 2ம் பாகம் உருவாகி வருகிறது. இந்நிலையில் குடும்பபடமாக உருவான மாயாண்டி குடும்பத்தார் படத்தின் இரண்டாம் பாக்ம் உருவாக உள்ளது. ராசு மதுரவன் இயக்கத்தில் 2009-ம் ஆண்டு மாயாண்டி குடும்பத்தார் படம் திரைக்கு வந்தது. குடும்ப உறவுகளை பற்றியும் அவர்களுக்குள் உள்ள மன உளைச்சல்கள்பற்றியும் இப்படம் பேசியது. இது ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. மணிவண்ணன், சீமான், தருண் கோபி என 10 இயக்குனர்கள் இதில் இணைந்து நடித்திருந்தனர். மாயாண்டி குடும்பத்தார் படத்தின் இரண்டாம் பாக்ம் உருவாக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.ஒரு கல்லூரியின் கதை படத்தை இயக்கிய நந்தா பெரியசாமி இப்படத்தை இயக்க உள்ளார். இதில் முதல்பாகத்தில் நடித்தவர் பல மீண்டும் நடிக்க உள்ளனர். இளம் ஹீரோவாக கவுதம் கார்த்திக் நடிக்க உள்ளார் என்று கூறப்படுகிறது.

சினிமாவில் சீசனுக்கு சீசன் ட்ரெண்ட் மாறுகிறது பேய் பட சீசன் இன்னும் நீடிக்கும் நிலையில் தற்போது ம் பாக சீசன் தொடங்கி உள்ளது.

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அதிகம் படித்தவை