ஒரே ஆண்டில் நான்காவது முறையாக மேட்டூர் அணை செஞ்சுரி

by Balaji, Nov 27, 2020, 12:54 PM IST

மேட்டூர் அணை இந்த ஆண்டில் நான்காவது முறையாக இன்று 100 அடியை எட்டி சாதனை படைத்துள்ளது. காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கன மழையின் காரணமாக கடந்த செப்டம்பர் மாதம் 25 ஆம் தேதி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியது. அணையின் 87 ஆண்டுகால வரலாற்றில் இது 66வது முறை. தொடர்ந்து அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வந்ததால் அக்டோபர் மாதம் 13-ம் தேதி இந்த ஆண்டில் இரண்டாவது முறையாகவும், அக்டோபர் 24-ந்தேதி 3-வது முறையாகவும் 100 அடியை எட்டியது. காவிரி டெல்டா பாசன பகுதிகளில் பெய்த தொடர் மழை காரணமாக மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும்.

தண்ணீரின் அளவு வினாடிக்கு 500 கன அடியாகவும், கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 250கன அடியாகவும் குறைக்கப்பட்டது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் மெல்ல உயர்ந்து இந்த ஆண்டில் நான்காவது முறையாக இன்று நீர்மட்டம் 100 அடியை எட்டியது. இதனால் விவசாயிகளும் மேட்டூர் அணையை சார்ந்துள்ள மீனவர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இன்று காலை நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 8,111 அடி நீர்வரத்து இருந்தது, அணையில் தண்ணீர் இருப்பு 64.84 டி.எம்.சி,யாக உள்ளது. அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 500 கன அடியும், கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 250 கன அடி நீரும் தற்போது வெளியேற்றப்பட்டு வருகிறது.

You'r reading ஒரே ஆண்டில் நான்காவது முறையாக மேட்டூர் அணை செஞ்சுரி Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை