பாணியை மாற்றும் ஹீரோ.. இறுதிகட்ட ஷூட்டிங் தொடங்கினார்..

by Chandru, Nov 27, 2020, 13:09 PM IST

'இன்று நேற்று நாளை' பட டைரக்டர் ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் அயலான். இப்படம் கடந்த 2018-ம் ஆண்டு ஜூன் மாதத்தில் தொடங்கப்பட்டது.
சயின்ஸ் பிக்‌ஷன் கதை அம்சமாக இப்படம் அமைக்கப்பட்டிருக்கிறது. வேற்றுகிரகவாசிகளின் டச்ச்சும் இப்படத்தில் உள்ளது. ஏஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார். நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்கிறார். பிரமாண்டமாக உருவாகி வரும் இந்தப் படத்தில் ரகுல் ப்ரீத் சிங் ஹீரோயினாக நடிக்கிறார். இவர்களுடன் கருணாகரன், யோகிபாபு, இஷா கோபிகர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றார்கள்.

இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் சிவகார்த்திகேயனின் பிறந்த நாளை முன்னிட்டு இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டது. அதில் வேற்றுக்கிரக வாசியும், சிவகார்த்திகேயனும் கையில் மிட்டாய் வைத்தபடி போஸ் தரப்பட்டிருந்தது. இந்தப் படத்தில் கிராஃபிக்ஸ் காட்சிகள் அதிகம் இருப்பதால் படத்தை முடிப்பதில் காலதாமதம் ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அதற்கு பின்னர் தொடங்கப்பட்ட டாக்டர் திரைப்படம் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது.

இந்நிலையில் இன்று முதல் அயலான் திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தொடங்கியிருப்பதாகவும், சிவகார்த்திகேயன் ஷூட்டிங்கில் இணைந்திருப்பதாகவும் படக்குழு தகவல் தெரிவித்திருக்கிறது. சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தின் செல்லம்மா.. பாடல் ஏற்கனவே நெட்டில் வெளியாகி வைரலானது. இப்படம் வெளியான பிறகே அயலான் பட புரமோஷன் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. கிராமத்து பின்னணி படங்களில் நடித்த வந்த சிவகார்த்திகேயன் சமீகாலமாக தனது பட பாணியை மாற்றி நகரம். கிரைம், வேற்று கிரகம் என்று புதிய கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை