திறன் மேம்பாட்டு பயிற்சிகளை அதிகரிக்க இந்தியன் வங்கி திட்டம்!

by Loganathan, Nov 30, 2020, 17:05 PM IST

தொழில்­ முனை­வோர்­ திறன் மேம்பாட்டு­ பயிற்சி­ வகுப்பு­களை அதி­க­ரிக்க இந்தி­யன் வங்கி­ திட்டம்­ வகுத்­துள்ளது.வங்­கித்­ துறையில் தொழில் முனைவோர்களுக்காக,­பிராந்திய­ மொழியில்­ திறன் மேம்பாட்டுப் பயிற்சி­ வகுப்பு­கள்­ நடத்­து­வது­ இதுவே முதல்­முறை. அந்தந்த மாநில மொழி­க­ளில்­ பயிற்சி­ வகுப்பு­ நடத்துவதை இந்தி­யன் வங்கி­ செயல்படுத்தியுள்ளது.கடன் வழங்­கு­வது­ மட்டுமில்லாமல் தொழிலை மேம்ப­டுத்த­ ஆலோசனை வழங்க­வும் இந்தி­யன் வங்கி­ முயற்சி­ எடுத்து­ தமி­ழில்­ பயிற்சி­ வகுப்பு நடத்துகிறது.­ ஒவ்வொரு­ கி்­ளையிலும்­ தொழில் முனைவோர்களை தேர்வு செய்து­ பயிற்சி­ அளிக்­கி­றோம்.

பயிற்சி­ வகுப்பில் நிர்வா­க­வி­யல்,­ நிதி­யி­யல்­ மற்­றும்­ வங்­கி­யில்­ சார்ந்த­ அம்சங்கள்­ தொடர்பாகப் பயிற்சி அளிக்கப்படுகிறது.தற்போது வரை மூன்று தொகுப்பு பயிற்சி­ வகுப்பு முடிந்துள்ளது. இந்த பயிற்சி வகுப்புகளில் கோவை,­ சென்­னை,­வேலூர்­ மாவட்ட­ தொழில்­மு­னைவோர்கள்­ அதி­க­மா­கப் பங்கேற்றனர்.

இந்த­ நிதி­யாண்­டுக்­குள்­ நாடு முழு­வ­தும்­ 1,500­ நபருக்கு­ பயிற்சி­ வகுப்பு­ நடத்த இந்தியன் வங்கியின் திறன் மேம்பாட்டுக் கழகம் திட்டமிட்டுள்ளது.தொழில்­முனைவோர்கள் அவர்கள்­ மொழி­யில்­ எளி­தாக­ புரிந்து­ கொள்ளவும், ஆர்வ­மாக­ பங்கேற்க­வும்.இது­ உத­வி­யாக­ இருக்­கும்.ஆன்­லைன் பயிற்­சி்­யை வெற்­றி­க­ர­மாக­ முடித்த அனைத்து­ பங்கேற்பாளர்களுக்கும் இந்தி­யன் வங்கி,­ பூர்ணதா­ கோ மற்­றும்­ மேட் ஆகியவற்றோடு இ்­ணைந்து­ சான்றிதழ் வழங்கப்ப­டும் என்று­ அறி­வித்துள்ளது.

More Tamilnadu News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை