யஷின் கே.ஜி.எஃப் தயாரிப்பு நிறுவனம் புதிய சாதனை திட்டம்...

by Chandru, Nov 30, 2020, 16:42 PM IST

இந்தியத் திரையுலகில் பிரம்மாண்ட படங்கள் எடுக்கும் நிறுவனங்கள் மிகவும் குறைவே. அதிலும் அனைத்து மொழிகளிலும் வெளியிடுவது போன்ற படங்களைத் தயாரிப்பது அரிதினும் அரிதே. 'கே.ஜி.எஃப் சேப்டர் 1' (KGF : Chapter 1') படத்தைத் தயாரித்து, அதை அனைத்து மொழிகளிலும் வெளியிட்டு பிரம்மாண்ட வெற்றி கண்ட நிறுவனம் ஹொம்பாளே பிலிம்ஸ் (Hombale films).கன்னட திரையுலகில் சூப்பர் ஸ்டார்களான புனித் ராஜ்குமார் (Puneeth Rajkumar) நடித்த 'நின்னிந்தலே' (Ninnindale), 'ராஜ்குமாரா' (Raajakumara) மற்றும் யஷ் நடித்த 'மாஸ்டர் பீஸ்' உள்ளிட்ட படங்களைத் தயாரித்தது ஹொம்பாளே பிலிம்ஸ் (Hombale films).

இதில் கன்னட திரையுலகில் அதிக வசூல் செய்த திரைப்படம் என்ற சாதனையைப் புரிந்தது 'ராஜ்குமாரா' திரைப்படம். இதனைத் தொடர்ந்து இந்திய அளவில் தன்னுடைய நிறுவனத்தை வளர்க்க முடிவு செய்தார் ஹொம்பாளே பிலிம்ஸ் நிறுவனர் விஜய் கிரகண்தூர் இதற்காக ஹொம்பாளே பிலிம்ஸ் தயாரித்த படம் தான் 'கே.ஜி.எஃப் சேப்டர் 1' படம் பிரஷாந்த் நீலின் அட்டகாச மான இயக்கத்தில், யஷ் நடிப்பில் வெளியான படம் வசூலில் சாதனை படைத்து இந்தியத் திரையுலகில் பலரையும் ஆச்சரியப்படுத்தியது. நடிப்பு, இயக்கம், ஒளிப்பதிவு, கதை, வசனம் என அனைத்து பிரிவுகளிலும் பார்வையாளர்களைக் கட்டிப் போட்டது 'கே.ஜி.எஃப் சேப்டர் 1'.

இப்படம் வெளியான 4 நாட்களிலேயே அதிக வசூல் செய்த கன்னடப் படம் என்ற மாபெரும் சாதனையையும் நிகழ்த்தியது. இந்திய அளவில் பரிச்சயமான தயாரிப்பு நிறுவனமாகவும் வளர்ந்தது ஹொம்பாளே பிலிம்ஸ்.தற்போது ஹொம்பாளே பிலிம்ஸ் நிறுவனம் அடுத்த பாய்ச்சலுக்குத் தயாராகி விட்டது. தொடர்ச்சியாக 3 படங்களின் தயாரிப்பில் பணிபுரிந்து வருகிறது. கன்னடம் மற்றும் தெலுங்கில் புனித் ராஜ்குமார் நடித்து வரும் 'யுவரத்னா', 'கே.ஜி.எஃப் சேப்டர் 2' மற்றும் இந்தியத் திரையுலகின் முன்னணி நடிகரும், இயக்குனரும் இணையும் படம் ஆகியவை தயாரிப்பில் உள்ளன.இந்தியத் திரையுலகில் ஒரு தயாரிப்பு நிறுவனம் தொடர்ச்சியாக, அனைத்து மொழிகளிலும் தயாராகும் 3 படங்களைத் தயாரித்ததில்லை. அந்த சாதனையை இப்போது ஹொம்பாளே பிலிம்ஸ் நிகழ்த்தியுள்ளது. அனைத்து மொழிகளிலும் 'கே.ஜி.எஃப் சேப்டர் 1' படத்தை வெளியிட்டு வெற்றி கண்டதைத் தொடர்ந்து, 'கே.ஜி.எஃப் சேப்டர் 2' படத்தையும் அனைத்து மொழிகளிலும் பிரம்மாண்டமாக வெளியிடத் தயாராகி வருகிறது.

இதனைத் தொடர்ந்து இந்தியத் திரையுலகின் முன்னணி நடிகரும், இயக்கு னரும் இணையும் படத்தை அனைத்து மொழிகளிலும் தயாரித்து வெளியிடவுள்ளது. இது தொடர்பாக அதிகாரப்பூர்வ மான அறிவிப்பு டிசம்பர் 2-ம் தேதி அன்று மதியம் 2 மணியளவில் வெளியாகவுள்ளது. இந்த அறிவிப்பு கண்டிப்பாக அனைவரையும் ஆச்சரிய மூட்டும் என்பதில் சந்தேகமில்லை.தொடர்ச்சியாக அனைத்து மொழி மக்களை ஆச்சரிய மூட்டும் வித்தியாச கதைக் களங்களைப் பிரம்மாண்ட மாகத் தயாரித்து வெளியிட ஹொம்பாளே பிலிம்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

More Cinema News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்