அதுக்குள்ள அடுத்து ஒன்னா.. நிவர், புரெவி புயலுக்கு மத்தியில் புதிய `காற்றழுத்த தாழ்வு மையம்!

by Sasitharan, Dec 3, 2020, 09:50 AM IST

புரெவி புயல் இன்றிரவு முதல் நாளை அதிகாலைக்குள் பாம்பன் மற்றும் குமரிக்கு இடையே கரையைக் கடக்கவுள்ளது. புயல் தாக்கக் கூடிய தென் மாவட்டங்களில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இன்று காலையில் மன்னார் வளைகுடா கிழக்கே 40 கி.மீ. தொலைவில் இலங்கைப் பகுதியில் நிலை கொண்டிருக்கிறது. பாம்பனில் இருந்து கிழக்கு மற்றும் தென்கிழக்கே 120 கி.மீ. தொலைவிலும், கன்னியாகுமரிக்கு கிழக்கு மற்றும் வடகிழக்கே 320 கி.மீ. தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.

இது மேலும் வலுப்பெற்று மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகரும். இன்று பிற்பகலில் பாம்பனை நெருங்கி வரவிருக்கிறது. அதன்பின்னர், தென்தமிழக கடலோர பகுதிகளை கடந்து இன்றிரவு அல்லது 4ம் தேதி அதிகாலையில் பாம்பனுக்கும், கன்னியாகுமரிக்கும் இடையே புயல் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த நேரத்தில் மணிக்கு 70 கி.மீ. முதல் 100 கி.மீ. வரையிலான வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் இன்னொரு புதிய காற்றழுத்த தாழ்வு மையம் உருவாக இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தற்போது அறிவித்துள்ளது. ஏற்கெனவே இரண்டு காற்றழுத்த தாழ்வு பகுதிகள் வலுவடைந்து நிவர், புரெவி என இரண்டு புயல்களாக மாறியது. இதில் நிவர் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்தநிலையில் தான் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி நாளை உருவாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

You'r reading அதுக்குள்ள அடுத்து ஒன்னா.. நிவர், புரெவி புயலுக்கு மத்தியில் புதிய `காற்றழுத்த தாழ்வு மையம்! Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை