சர்க்கரை குடும்ப அட்டைகளை அரிசி குடும்ப அட்டைகளாக மாற்றலாம்: அரசு அறிவிப்பு

by Balaji, Dec 5, 2020, 18:32 PM IST

தமிழகத்தில் ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களில் சர்க்கரை மட்டும் காடுகளாக மாற்றலாம் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது.இதுகுறித்து தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளதாவது:பொது விநியோகத் திட்டத்தில் தற்பொழுது 5,80,298 குடும்ப அட்டைகள் சர்க்கரை குடும்ப அட்டைகளாக உள்ளன. இந்த குடும்ப அட்டைகளை வைத்திருப்பவர்களில் பெரும்பாலானோர் தங்களுடைய குடும்ப அட்டைகளை அரிசி பெறக்கூடிய குடும்ப அட்டைகளாக மாற்றம் செய்து தரவேண்டும் என்ற கோரிக்கையினை ஏற்று, தமிழ்நாடு முதலமைச்சர் ஒரு உத்தரவினைப் பிறப்பித்துள்ளார்.

இதன்படி சர்க்கரை குடும்ப அட்டைதாரர்கள், தங்கள் குடும்ப அட்டைகளைத் தகுதியின் அடிப்படையில் அரிசி குடும்ப அட்டைகளாக மாற்றம் செய்ய விரும்பினால், அதற்கான விண்ணப்பங்களை தங்களுடைய குடும்ப அட்டையின் நகலினை இணைத்து, இன்று (5.12.2020) முதல் 20.12.2020 வரை www.tnpds.gov.in என்ற இணைய முகவரியிலும், சம்மந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர்கள் மற்றும் உதவி ஆணையர்களிடமும் சமர்ப்பிக்கலாம். அவ்வாறு பெறப்படும் விண்ணப்பங்கள், உடனடியாக பரிசீலனை செய்யப்பட்டு, சர்க்கரை குடும்ப அட்டைகள் (Sugar Option Family Cards), தகுதியின் அடிப்படையில் அரிசி குடும்ப அட்டைகளாக (Rice Option Family Cards) மாறுதல் செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும். என்று தெரிவித்துள்ளார்.

You'r reading சர்க்கரை குடும்ப அட்டைகளை அரிசி குடும்ப அட்டைகளாக மாற்றலாம்: அரசு அறிவிப்பு Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை