நெல்லை தினமலர் நிர்வாகி தினேஷ் கமல் கட்சியில் சேர்ந்தார்..

Advertisement

திருநெல்வேலி பதிப்பு தினமலர் செயல் இயக்குனர் தினேஷ், மக்கள் நீதிமய்யம் கட்சியில் சேர்ந்தார்.தமிழகத்தின் முன்னணி தமிழ் நாளிதழ் தினமலர். இந்த பத்திரிகையை மறைந்த டி.வி.ராமசுப்பையர் குடும்பத்தினர் நடத்தி வருகின்றனர். திருநெல்வேலி பதிப்பை டி.வி.ராமசுப்பையரின் கொள்ளுப் பேரனும் ஆர்.வெங்கடபதியின் பேரனுமாகிய தினேஷ் நடத்தி வருகிறார். நெல்லை பதிப்பின் செயல் இயக்குனராக உள்ள இவர் இன்று(டிச.16) மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்தார்.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் முன்னிலையில் தினேஷ் அக்கட்சியில் சேர்ந்தார். அவருக்கு உறுப்பினர் கார்டு அளித்து கமல் வரவேற்றார்.
ஏற்கனவே திருச்சி தினமலர் ஆசிரியர் ஆர்.ராமசுப்பு, பாஜகவில் சேர்ந்து அக்கட்சியில் தேசியப் பொதுக் குழு உறுப்பினராக உள்ளார். அவரது சகோதரர் ஆர்.ஆர்.கோபால்ஜி, விசுவ இந்து பரிஷத் பொதுச் செயலாளராக உள்ளார்.

சமீபகாலமாக, தினமலர் சென்னை பதிப்பில் தினமும் திராவிட இயக்கங்களைப் பழித்தும், பாஜக மற்றும் ரஜினியின் தவறுகளை எல்லாம் மறைத்துத் தூக்கிப் பிடித்தும் கட்டுரைகளை எழுதி வருகிறது. எனவே, பாஜக, விசுவ இந்து பரிஷத், ரஜினி கட்சி, மக்கள் நீதிமய்யம், ஆர்.ஆர்.கோபால்ஜி, ஆர்.பாலாஜி, தினேஷ் ஆகிய எல்லா பெயர்களுமே ஒரே அரசியல் புள்ளியில் சேருவதை உணரலாம். அதனால்தான் கமல், ரஜினி கட்சிகளை பாஜகவின் பி டீம்களாக திராவிட இயக்கத்தினர் சுட்டிக்காட்டுகின்றனர்.

Advertisement
மேலும் செய்திகள்
actress-mahalakshmi-s-husband-ravinder-is-in-trouble-again
சிக்கிய பென் டிரைவ்,ஆவணங்கள்... நடிகை மகாலட்சுமியின் கணவர் ரவீந்தருக்கு மீண்டும் சிக்கல்
he-broke-his-promise-so-we-broke-up-ramarajan-open-talk-on-nalini
சத்தியம் செய்ததை மீறினார்... அதனால் பிரிந்தோம்- நளினி குறித்து ராமராஜன் ஓபன் டாக்
hospital-built-by-napoleon-grandfather-greeted-the-boy
நெப்போலியன் கட்டிய மருத்துவமனை... நீ நடப்பாய் சிறுவனை வாழ்த்திய பெரியதம்பி தாத்தா.... வாக்கு பலித்த அதிசயம்
prime-minister-light-house-plan-chennai
பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்
singarach-chennai-2-0-football-ground-laid-foundation
“சிங்காரச் சென்னை 2.0” செயற்கை புல் கால்பந்து மைதானம்
new-restriction-imposed-from-tomorrow
இதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா? – புதிய கட்டுப்பாடுகள் என்ன?
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
local-trains-doesn-t-function-from-tomorrow
புறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!
/body>