எட்டு வழிச்சாலை : சேலம் அருகே கிராம மக்கள் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி போராட்டம்

by Balaji, Dec 18, 2020, 13:10 PM IST

சேலம் அருகே பூமாங்காடு கிராமத்தில் (பாரப்பட்டி) எட்டு வழி சாலை திட்டத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி முதல்வருக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சேலத்தில் இருந்து சென்னை வரையிலான எட்டு வழி சாலை திட்டத்திற்கு 92 சதவீத விவசாயிகள் தங்கள் நிலங்களை தர சம்மதம் தெரிவித்துள்ளதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று அரியலூர் மாவட்ட நிகழ்ச்சியில் பேசுகையில் தெரிவித்திருந்தார்.

முதல்வரின் இந்தப் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து, சேலத்தில் எட்டு வழிச் சாலை திட்டத்தால் பாதிப்படைந்த விவசாயிகள், இன்று தங்கள் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி உள்ளனர். சேலம் மாவட்டத்தில் தமிழக முதல்வர் இன்று அம்மா மினி கிளினிக் திறப்பு விழா நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ள நிலையில், விவசாயிகள் வீடுகளில் கறுப்புக்கொடி ஏற்றி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உத்தமசோழபுரம் பாரப்பட்டி, பூலாவரி , கல்பட்டி, ராமலிங்கபுரம் குப்பனூர் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் தங்கள் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றியுள்ளனர்.

You'r reading எட்டு வழிச்சாலை : சேலம் அருகே கிராம மக்கள் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி போராட்டம் Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை