நடிகை சுனைனாவை கஷ்டத்தில் ஆழ்த்தியது யார்? அவரே சொல்கிறார்..

by Chandru, Dec 18, 2020, 12:49 PM IST

2020ம் ஆண்டு பிறந்த முதல் ஓரிரு மாதம் மட்டுமே மக்களிடம் இயல்பு வாழ்க்கை இருந்து வந்தது. மார்ச் மாதம் முதல் கொரோனா வைரஸ் பீதி பரவ ஆரம்பித்தது. வைரஸ் தொற்று மக்களிடம் பரவாமலிருக்க மத்திய, மாநில அரசுகள் ஊரடங்கு சட்டத்தை அமல்படுத்தியது. வீட்டை வெளியில் வரக்கூடாது. அருகருகே நிற்கக் கூடாது. காய்கறி கடை முதல் பொது போக்கு வரத்து வரை எல்லாம் முடக்கப்பட்டது. அலுவலகங்கள் மூடப்பட்டன. பள்ளிகள் கிடையாது. சினிமா தியேட்டர்கள் உள்ளிட்ட எந்த பொழுது போக்கும் கிடையாது. 6 மணிக்கு மேல் நடமாடக் கூடாது இப்படி என்னெவெல்லாம் முடியுமோ அவ்வளவு விதிமுறைகளும் கொரோனா ஊரடங்கு பேரில் அமல்படுத்தப்பட்டது.வீட்டுக்குள்ளேயே இருந்த பல நடிகர்கள் கொரோனா பாதிப்புக்குள்ளாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.

அமிதாப்ச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யாராய், விஷால், நிக்கி கல்ராணி, தமன்னா, ஐஸ்வர்யா அர்ஜூன், ராஜமவுலி, டாக்டர் ராஜசேகர், ஜீவிதா இப்படி ஏராளமனவர்கள் பாதிக்கப்பட்டனர். ரிஷிகபூர், இர்பான் கான், சிரஞ்சீவி சார்ஜா, எஸ்பி பாலசுப்ரமணியம் என பெரிய புள்ளிகளை பறிகொடுத்தோம். இந்த ஆண்டு சோகமான ஆண்டு என்றுதான் யாரைக் கேட்டாலும் சொல்வார்கள். பலரும் அதுபற்றி கருத்துக்களை பகிர்ந்த் நிலையில் ஆண்டின் இறுதியில் நடிகை சுனைனா தனது எண்ணங்களையும், வேதனைகளையும் பகிர்ந்துக் கொண்டிருக்கிறார். 2020 ஆம் ஆண்டு அனைவருக் கும் கடினமான ஒன்றாகும். பல வழிகளில், ஆண்டு சவாலானது. இருப்பினும், அந்த சவால்கள் தங்களை வடிவமைக்கவும் தங்களை ஒரு சிறந்த பதிப்பாக மாற்றவும் உதவியது என்று பலர் கூறுகிறார்கள். நடிகை சுனைனாவும் இதற்கு உடன் படுகிறார். 2020 ஆம் ஆண்டைப் பற்றி இவர் ஒரு உணர்ச்சிபூர்வமான குறிப்பை எழுதி உள்ளார்.

நடிகை சுனைனா தனது குறிப்பில் எழுதியதாவது: 2020 இல் நிறைய நடந்து விட்டது. வாழ்கை பாடம், ஏமாற்றங்கள், உடைந்த இதயங்கள், சோகங்கள். இந்த வருடம் நம் எல்லோரையும் சோதித்துவிட்டது. இதுபோல் இதுவரை நான் இந்தளவுக்கு உணர்ச்சிவசப்பட்டதும், சவாலாகவும் உணர்ந்ததில்லை. ஆம், இது கடினமாக இருந்தது. ஆனால் இந்த அனுபவத்தால் நான் உறுதியை சம்பாத்திருக்கிறேன். அதற்காக நான் கடமை பட்டிருக்கிறேன். என் இதயம் எல்லோரை பற்றியும் சிந்திக்கிறது. யாரெல்லாம் இந்த கடினத்தை அனுபவித்தார்களோ அவர்களைப்பற்றி எண்ணுகிறேன். மக்களில் பலர் பெரும் அவதிக்குள்ளானார்கள். அது எனக்கு தெரியும். ஒவ்வொரு நாளும் மனப்பூர்வமாக அவர்கள் அனைவரும் கஷ்டத்திலிருந்து மீள வேண்டும் என்று நான் பிரார்த்தித்தேன்.

அதை என்னால் விவரிக்க முடியவில்லை. பேசவதற்கு யாரும் இல்லை. நான் தனி ஆளாக உணர்ந்தேன். பிரார்த்தனை நேரத்தில்தான் அதனை சமாளிக்க முடிந்தது. உங்களுக்குள் அமைதியை காணுங்கள். அதை நான் உணர்ந்தபோது என்னை நான் உற்சாகமாக வைக்க முடியவில்லை. நான் போராடினேன். அமைதியை சிறிதே அடைந்தேன். 2021ம் ஆண்டு உறுதியான ஞானத்தையும், வலுவான இதயத்தையும் தரவேண்டும். நீங்களும் அதை பெற வேண்டும். இவ்வாறு சுனைனா கூறி உள்ளார். நடிகை சுனைனா தமிழில் திருத்தணி, நீர்பறவை, சமர், வன்மம், தெறி, காளி, சில்லு கருப்பட்டி போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார். தற்போது ட்ரிப், எரியும் கண்ணாடி ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

You'r reading நடிகை சுனைனாவை கஷ்டத்தில் ஆழ்த்தியது யார்? அவரே சொல்கிறார்.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை