காவல் ஆய்வாளரை கண்டித்து கரூரில் ஒற்றை ஆளாய் பெண் போராட்டம்

கரூர் ராயனூரில் வசித்து வருபவர் சந்திரா. இவரது மகன் நாகராஜ் (28) என்பவரை, பாகநத்தத்தை சேர்ந்த பொன்னியன் மற்றும் மூன்று பேர் தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த நாகராஜ் கரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து சந்திரா தாந்தோன்றிமலை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.இந்த வழக்கை விசாரித்து வரும் காவல் ஆய்வாளர் நியாயமான முறையில் விசாரணை நடத்தாமல் குற்றவாளிகளுக்குச் சாதகமாக நடந்து கொண்டு அவர்கள் தப்பிக்க வழி செய்வதாகக் கூறப்பட்டது .

இதனால் சந்திரா, தனக்கு நியாயம் கேட்டும், தனது மகனைத் தாக்கியவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கக் கோரியும், உரிய முறையில் விசாரணை மேற்கொள்ளாமல், குற்றவாளிக்குச் சாதகமாகச் செயல்பட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, சந்திரா ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமர்ந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அங்குச் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.இதையடுத்து அங்கு வந்த போலீஸார், முறையாக விசாரணை நடத்துவதாகக் கூறி சந்திராவைக் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement

READ MORE ABOUT :