நயன்தாரா-விக்னேஷ் சிவன் வெளியிட்ட திடீர் கடிதம்.. என்ன சொல்கிறார்கள்?

by Chandru, Dec 22, 2020, 16:07 PM IST

நடிகை நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ்சிவன் இணைந்து காதல் ஜோடிகளாகக் கோலிவுட்டில் வலம் வந்துக்கொண்டிருக்கின்றனர். கொரோனா ஊரடங்கள் ஒரே வீட்டில் தங்கி இருந்தபோதும் கொரோனா விதிமுறைகளைக் கடைப் பிடித்து வந்தனர்.கொரோனா தளர்வில் விக்னேஷ் சிவன் பிறந்த நாளை கொண்டாட தனிவிமானத்தில் அவரை கோவா அழைத்துச் சென்றார் நயன்தாரா. அங்கு தடபுடலாக பிறந்தநாள் விழாவை கொண்டாடிவிட்டு பிறகு தனி விமானத்தில் சென்னை திரும்பினர். இது பரபரப்பாகப் பேசப்பட்டது.

நயன்தாரா அண்ணாத்த படப்பிடிப்பிற்கு காத்திருந்தார், விக்னேஷ் சிவன், காத்து வாக்குல ரெண்டு காதல் படப் பிடிப்பைத் தொடங்க காத்திருந்தார். இரண்டு படங்களின் படப்பிடிப்பும் கிட்டத் தட்ட ஒரே சமயத்தில் தொடங்கப்பட்டது. அண்ணாத்த படப் பிடிப்புக்காக நயன்தாரா ஐதராபாத் சென்று ரஜினி காந்த்துடன் ஷூட்டிங்கில் கலந்து கொண்டார். அதே போல் விக்னேஷ் சிவனும் ஐதராபாத் சென்று காத்து வாக்குல ரெண்டு காதல் பட ஷூட்டிங்கை தொடங்கினார். ஆனால் இந்த படப்பிடிப்பில் மற்றொரு கதாநாயகி சமந்தா கலந்துகொண்டார். தற்போது நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஐதராபாத்தில் படப்பிடிப்பில் பிஸியாக உள்ளனர்.

இந்நிலையில் அவர்கள் இருவரும் சேர்ந்து இன்று ஒரு கடிதம் வெளியிட்டனர். காதலை வெளிப்படுத்தி கடிதம் வெளியிட்டார்களா என்று பரபரக்க வேண்டாம். அதுவொரு பாராட்டு கடிதம். புதிய படக் குழு ஒன்று கூழாங்கல் என்ற படத்தை உருவாக்கி உள்ளது. அதை இருவரும் பார்த்து பாராட்டி உள்ளனர். இருவரும் வெளியிட்ட கடிதத்தில் கூறியிருப்பதாவது:மிக அரிதான ஒரு நாள் தான், ஒரு படைப்பைப் பார்த்து வியந்து நாம் இருக்கும் துறையை நினைத்து பெருமை கொள்ளும் எண்ணம் தோன்றும். அப்படி ஒரு நாளாக. இறுதி பணிகளில் இருந்த கூழாங்கல் எனும் திரைப் படத்தைப் பார்த்தபோது தோன்றியது.கூழாங்கல் பி.எஸ்.வினோத் ராஜின் முதல் படம். தலைப் பை போலவே படம் மிக எளிமையாக இருந்தாலும் அது எங்களுக்குள் ஏற்படுத்திய தாக்கம் ஆழமானது. முழுக்க முழுக்க திறமையான புது குழுவினராலும், நடிகர்களாலும் இயக்குனராலும் உருவான இத்திரைப்படத்தைப் பார்த்து பாராட்டுகளோடு மட்டும் நிற்காமல் தன்னுடைய பின்னணி இசையால் கூழாங்கல்லின் ஆன்மாவை மீட்டெடுத்திருக்கிறார் யுவன் சங்கர் ராஜா.

இத்திரைப் படத்தின் மூலமாக எங்களுக்குக் கிடைத்த திரை அனுபவத்தை நம் மக்கள் அனைவருக்கும் வழங்குவது மட்டுமல்லாது சர்வதேச திரைப்பட விழாக்களுக்கும் கொண்டு செல்வது என முடிவு செய்து இப்படத்தின் முழு தயாரிப்பைப் பொறுப்பேற்றுள்ளோம். உங்களுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையில் இத்திரைப்படத்தை உங்களுக்காக வழங்குவதில் நாங்கள் பெருமை கொள்கிறோம்.
இவ்வாறு நயன்தாரா, விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளனர்.

You'r reading நயன்தாரா-விக்னேஷ் சிவன் வெளியிட்ட திடீர் கடிதம்.. என்ன சொல்கிறார்கள்? Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை