பாஜகவில் இணைந்தது ஏன்... அருணாச்சலம் சொல்லும் காரணம்?!

Advertisement

விவசாயிகளின் நலன் கருதியே பாஜகவில் இணைந்துள்ளதாக முன்னாள் மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச் செயலாளர் அருணாச்சலம் தெரிவித்துள்ளார். மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்தநாள் விழா சென்னையில் பாஜக தலையிடமாக கமலாலயத்தில் இன்று நடைபெற்றது. இதில், மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பங்கேற்று வாஜ்பாய் திருவுருப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

இதற்கிடையே, சென்னை கமலாலயம் வந்த மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச்செயலாளர் அருணாச்சலம் மத்தியமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் முன்னிலையில் தன்னை பாரதிய ஜனதா கட்சியில் இணைத்துக் கொண்டார். தொடர்ந்து, அவருக்கு அடிப்படை உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது. நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சி தொடங்கிய முதல் அவருக்கு நெருக்கமாக அருணாச்சலம் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாஜகவில் இணைந்தப்பின் கமலாலயத்தில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த அருணாச்சலம், தொலைநோக்கு சிந்தனையுடன் வேளாண் சட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. ஒரு விவசாயிகளுக்கு வேளாண் திட்டம் பயனுள்ளது. வேளாண் திட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்குமாறு மக்கள் நீதி மய்யத்தின் உயர்நிலை கூட்டத்தில் தெரிவித்தேன் என்றார். திமுகவில் உள்ளது போல் கட்சி தலைவர் கமல்ஹாசன் நிலைப்பாடு எடுக்கிறார்கள். விவசாயிகளின் நலன் கருதி முடிவு எடுக்காமல், கட்சியின் அடிப்படையில் முடிவு எடுத்தார்கள். எனவே, மக்கள் நீதி மய்யத்தில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தேன் என்று தெரிவித்தார்.

Advertisement
மேலும் செய்திகள்
actress-mahalakshmi-s-husband-ravinder-is-in-trouble-again
சிக்கிய பென் டிரைவ்,ஆவணங்கள்... நடிகை மகாலட்சுமியின் கணவர் ரவீந்தருக்கு மீண்டும் சிக்கல்
he-broke-his-promise-so-we-broke-up-ramarajan-open-talk-on-nalini
சத்தியம் செய்ததை மீறினார்... அதனால் பிரிந்தோம்- நளினி குறித்து ராமராஜன் ஓபன் டாக்
hospital-built-by-napoleon-grandfather-greeted-the-boy
நெப்போலியன் கட்டிய மருத்துவமனை... நீ நடப்பாய் சிறுவனை வாழ்த்திய பெரியதம்பி தாத்தா.... வாக்கு பலித்த அதிசயம்
prime-minister-light-house-plan-chennai
பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்
singarach-chennai-2-0-football-ground-laid-foundation
“சிங்காரச் சென்னை 2.0” செயற்கை புல் கால்பந்து மைதானம்
new-restriction-imposed-from-tomorrow
இதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா? – புதிய கட்டுப்பாடுகள் என்ன?
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
local-trains-doesn-t-function-from-tomorrow
புறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!

READ MORE ABOUT :

/body>