இடஒதுக்கீட்டில் அதிமுக தலைமை மவுனம்.. சட்டமன்ற தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறதா பாமக?!

by Sasitharan, Dec 25, 2020, 20:36 PM IST

தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில் தைலாபுரம் தோட்டத்தில் ராமதாஸை அமைச்சர்கள் எதற்கு சந்திதார்கள் என்ற சந்தேசகம் அரசியல் கட்சியினர் மத்தியில் பூகமாக வெடித்துள்ளது. தமிழகத்தில் 2021-ம் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் அல்லது மே மாதம் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்கிடையே, தேர்தல் பிரச்சாரத்தில், அதிமுக, திமுக, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இதற்கிடையே, ஆளும் அதிமுகவுடன் கூட்டணி வைத்து பாட்டாளி மக்கள் கட்சி, தமிழ்நாட்டில் கல்வி, வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20% தனி இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி பாமக மற்றும் வன்னியர் சங்கத்தின் சார்பில் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த செவ்வாய்கிழமை மாலை தமிழக அமைச்சர்கள் அன்பழகன், மற்றும் தங்கமணி ஆகியோர் தைலாபுரத்தில் உள்ள டாக்டர் ராமதாஸை சந்தித்து சிறிது நேரம் பேசிவிட்டு சென்றனர்.

அமைச்சர்கள் சந்திப்பு குறித்து பாமக நிர்வாகிகள் கூறுகையில், மாற்றம் , முன்னேற்றம் அன்புமணி என்ற முழக்கம் இளைஞர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தினாலும், அதன் பின் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணி குறித்த பாமக எடுத்த முடிவுகளை இளைஞர்கள் ஏற்க வில்லை. தற்போது, பாமக நடத்திய போராட்டத்திற்கும் போதிய வரவேற்பு இல்லை. வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு அளிக்க வழிவகை செய்ய வேண்டும் என்ற நிபந்தனையுடன் தான் பாமக அதிமுக கூட்டணியில் இடம்பெற்றது. சட்டமன்ற தேர்தல் வரவுள்ளது. அதிமுக ஆட்சி காலம் முடியும் நிலையில், கட்சி தலைமை வன்னியர் இட ஒதுக்கீடு குறித்து எவ்வித முயற்சியும் எடுக்கவில்லை. எனவே 20% இட ஒதுக்கீடை உடனே வழங்க வேண்டும் என்று அதிமுக அரசுக்கு ராமதாஸ் நெருக்கடி கொடுத்து வருகிறார் என்று தெரிவிக்கின்றனர்.

இட ஒதுக்கீடு தற்போது பெறாவிட்டால் எப்போதும் பெற முடியாது என்பதில் பாமக உறுதியாக உள்ளது. இதன் அடுத்தகட்ட போராட் டம் வருகிற 30-ம் தேதி தமிழகம் முழுவதும் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் நடைபெறுகிறது. ஒருவேளை தனி இடஒதுக்கீடு விவகாரத்தில் அதிமுக அரசு சரியான முடிவை எடுக்காவிட்டால், தனித்துப் போட்டி என்ற நிலையை எடுக்கவும் வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கின்றனர்.

You'r reading இடஒதுக்கீட்டில் அதிமுக தலைமை மவுனம்.. சட்டமன்ற தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறதா பாமக?! Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை