மயிலாடுதுறை முத்துவக்கீல் சாலையில் பெருமாள் சாமி என்பவர் பழைய இரும்பு கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவரது கடையில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பாடப் புத்தகங்கள் பண்டல் பண்டலாக கட்டி குவித்து வைக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகளுக்குத் தெரிய வந்தது. இதையடுத்து மயிலாடுதுறை கோட்டாட்சியர் மகாராணி தலைமையில் வருவாய்த்துறை அதிகாரிகள் அந்த பழைய இரும்பு கடையில் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் ஐயாயிரத்துக்கு மேற்பட்ட நடப்பு கல்வி ஆண்டுக்கான பாடப்புத்தகங்கள் பண்டல் பண்டலாகக் கட்டி குவித்து வைக்கப்பட்டிருந்ததைக் கண்டனர்.
இதையடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது போலீசார் கடை உரிமையாளர் பெருமாள் சாமியை உடனடியாக கைது செய்தனர். கைது செய்யப்பட்டார். அவர் அளித்த தகவலின் பேரில் மயிலாடுதுறை கிட்டப்பா மேல்நிலைப்பள்ளியில் பணியாற்றும் மேகநாதன் என்பவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.தமிழக அரசு மாணவர்களின் நலன் கருதி விலையின்றி வழங்கும் புத்தகங்களைப் பழைய இரும்பு கடையில் மொத்தமாக எடைக்கு விற்பனை செய்த சம்பவம் அதிகாரிகளையும் பொதுமக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.