குரூப் 1 தேர்வு விடைத்தாள்களைத் திருத்த புதிய நடைமுறை அமல் படுத்தப்பட இருப்பதாக டிஎன்பிஎஸ்சி சேர்மன் பாலசந்திரன் தெரிவித்தார்.ஊட்டியில் அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:தமிழகத்தில் வரும் 3-ந்தேதி நடைபெறும்.எழுத 2 லட்சத்தி 56 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். அதில் 1 லட்சத்து 80 ஆயிரம் பேர் ஹால் டிக்கெட்டுகளை டவுண்லோட் செய்துள்ளனர்.ஹால் டிக்கெட் டவுண்லோடு செய்ய ஆதார் கட்டாயம் என்றிருந்த நிலையில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. அதற்குப் பதிலாக ஓ. டி. பி. மற்றும் பிறந்த தேதி மூலமாக ஹால் டிக்கெட்டை பெறலாம். தமிழகத்தில் குரூப் ஒன் தேர்வு எழுத 856 மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
டி.என்.பி.சி தேர்வில் முறைகேடுகள் நடைபெறுவதைத் தடுக்க ஓ.எம்.ஆர் சீட்டில் இரண்டு புதிய முறைகள் கொண்டு வரபட்டுள்ளது. அதற்காக ஓ.எம்.ஆர். சீட்டில் தேர்வு எழுதுபவர் எத்தனை கேள்விகள் எழுதி உள்ளார் என்பதை அறை கண்காணிப்பாளர் சரிபார்த்து சான்று அளிக்க வேண்டும்.ஓ.எம்.ஆர் சீட் இரண்டு பகுதிகளாக இருக்கும். அதில் ஒரு பகுதியில் தேர்வு எழுதுபவரின் விபரங்களும் மற்றொரு பகுதியில் அந்த விபரங்கள் பார் கோடாக பதியப்பட்டிருக்கும். தேர்வு முடிந்தவுடன் பார்கோடு உள்ள பகுதி மட்டும் ஸ்கேன் செய்யபடும்.
இதனால் ஓ.எம்.ஆர் சீட் யாருடையது என்ன நம்பர் என்பதே யாருக்கும் தெரியாத அளவிற்கு புதியநடைமுறை கொண்டு வரபட்டுள்ளதாக தெரிவித்தார்.இதற்கு முன்பு நடைபெற்ற டி.என்.பி.சி தேர்வின் போது அழியும் மை கொண்டு எழுதியதாகவும் விடைதாள் எடுத்துச் செல்லும் வழியில் திருத்தப்பட்டதாகவும் புகார் எழுந்தது. அது போன்ற குறைபாடுகள் ஏற்படாமல் தடுக்க தேர்வு முடிந்தவுடன் ஓ.எம்.ஆர் சீட்கள் அனைத்தும் ஒரு பெட்டியில் வைத்து ஜி.பி.எஸ் லாக் போடப்படும் . அந்த ஜி.பி.எஸ் பெட்டின் ரகசிய எண் கட்டுபாட்டாளருக்கு மட்டுமே தெரியும் என்பதால் முறைகேடு நடைபெறாமல் தடுக்கப்படும். .
தேர்வு எழுதுபவர்கள் தேர்வு மையத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக வர வேண்டும் . உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டு முறையாக கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் பின்பற்றப் பின்னர் தான் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள். அதிக உடல் வெப்பநிலை, சளி, காய்ச்சல் உள்ளவர்களைத் தனி அறையில் வைத்துத் தேர்வு எழுத நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.