புத்தாண்டு : சொற்ப அளவு சுற்றுலா பயணிகளால் குதூகலம் இழந்த குற்றாலம்

by Balaji, Jan 1, 2021, 17:15 PM IST

புத்தாண்டு தினமான இன்று குற்றாலத்தில் குறைந்த அளவு சுற்றுலா பயணிகளே வந்திருந்தனர். புத்தாண்டு தினமான இன்று சுற்றுலா நகரமான குற்றாலத்தில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவர் என்று பலரும் எதிர்பார்த்திருந்த நிலையில் சொற்ப அளவிலேயே சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர் இதனால் குற்றாலம் குதுகலம் இன்றி காணப்பட்டது. திடீர் மழை காரணமாக நேற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மெயின் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது.

இன்று காலை 10:30 மணி வரை மெயின் அருவியில் குளிக்க அனுமதி இல்லாததால் பலரும் ஐந்தருவி மற்றும் பழைய குற்றால அருவிக்கு சென்றனர்.புத்தாண்டு தினமான இன்று வழக்கத்தைவிட மிக குறைந்த அளவே சுற்றுலாப் பயணிகள் வந்திருந்தனர். இதனால் சுற்றுலா பயணிகளின் வருகையை எதிர்பார்த்துக் காத்திருந்த வியாபாரிகள் மிகுந்த ஏமாற்றத்திற்கு உள்ளாகினர்.

More Tamilnadu News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை