கரூர் மாவட்ட மாவட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் இன்று சுற்றுப் பயணம் மேற்கொண்டார் இதற்காக மாவட்ட எல்லையான நொய்யல் பகுதியில் ஆயிரக்கணக்கான திமுக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அவரை வரவேற்கக் காத்திருந்தனர்.அப்போது மு.க.ஸ்டாலின் போகவே வேடம் அணிந்த திமுக தொண்டர் ஒருவர் நான்கைந்து கார்கள் புடைசூழ ஒரு காரில் வந்தார். அங்கு ஸ்டாலின் வருகையை எதிர்பார்த்து இருந்தவர்கள் இவரைக் கண்டதும் ஸ்டாலின்தான் வந்துவிட்டார் என்று உற்சாகம் மிகுதியில் ஆரவாரம் செய்தனர்.
ஸ்டாலினைப் போலவே வெண்ணிற ஆடை கழுத்தில் கருப்பு சிவப்பு டவலை சுற்றியபடி கூலிங் கிளாஸ் அணிந்து வந்திருந்தார். தொண்டர்களைப் பார்த்து ஸ்டாலினைப் போலவே கையசைத்த அவர் ஒரு தொண்டரைக் கட்டியணைத்து உச்சி முகர்ந்து முத்தம் கொடுத்தார் . இவர் மற்றவர்களைப் போல நடந்து வந்து இருந்தால் நம்பி இருக்க மாட்டோம். ஆனால் நான்கைந்து கார்கள் புடைசூழப் பந்தா வாய் அங்கு வந்ததால் தலைவர்தான் வந்துவிட்டார் என்று நினைத்து ஏமாந்து விட்டோம் என்று சொல்லிச் சிலாகித்தனர் சில திமுக தொண்டர்கள்.