பிரபல இயக்குனர் கைவிடும் படம்..

by Chandru, Jan 3, 2021, 17:16 PM IST

கோலிவுட்டில் பல படங்கள் அறிவிக்கப்படுகின்றன. பெரும்பாலான படங்கள் திரைக்கு வந்தாலும் ஒரு சில படங்கள் அறிவிப்போடு நிற்கிறது அல்லது கைவிடப்படுகிறது. அப்படியொரு படம் பிரபல இயக்குனரால கைவிடப்பட்டிருக்கிறது.கிழக்கே போகும் ரயில், 16 வயதினிலே. அலைகள் ஓய்வதில்லை, சிவப்பு ரோஜாக்கள் என 70களின் ஆரம்பக் கட்டங்களில் தொடங்கி முதல் மரியாதை, பசும்பொன், கொடி பறக்கிறது எனப் பல வெற்றிப் படங்களைக் கொடுத்தவர் இயக்குனர் பாரதிராஜா. இவர் ஆத்தா என்ற படம் உருவாக்க உள்ளதாக அறிவித்திருந்தார். ஆனால் அப்படத்தை தற்போது கைவிடுவதாக அறிவித்திருக்கிறார்.

இதுபற்றி பாரதிராஜா கூறியதாவது:என் இனிய தமிழ் மக்களே 15 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட வேண்டிய கதை ஆத்தா. முன்பே இந்த கதையைப் படமாக்கி இருந்தால். உங்கள் பாரதிராஜாவைக் கண்டிருக்கலாம். காலசூழ்நிலை ஒன்று உள்ளது.நடைமுறை நவீன முற்போக்கான இந்த கால கட்டத்தில் வந்த பல சினிமாக்களின் கருவை நாடியுள்ளது
ஆத்தா. இதை மீண்டும் கையில் எடுத்தால் பொருள் ரீதியாகவும்,தொழில் ரீதியாகவும் பெரும் நட்டம் ஏற்படும் என்ற காரணத்தினால்,ஆத்தா கைவிடப்படுகின்றது. புதிய அறிவிப்பு ,புதிய தலைப்புடனும் புதிய தொழில்நுட்ப கூட்டணியுடன். மிக விரைவில் அறிவிக்கப்படும் இவ்வாறு அவர் தெரிவித்திருக்கிறார்.

கிராமத்துப் பக்கமே தலை காட்டாமல் பட்டணத்தில் அதுவும் ஸ்டுடியோக்களுக்குள் படமாகி வந்த திரைப்படங்களைக் கிராமத்துப் பக்கம் திருப்பிவிட்ட பெருமை பாரதிராஜாவைச் சேரும். அவரது இயக்கத்தில் 16 வயதினிலே, கிழக்கே போகும் ரயில், மண்வாசனை எனப் பல படங்கள் கிராமங்களில் படமாக்கப்பட்டு திரைக்கு வந்து வெற்றிகளை குவித்தது. அதன்பிறகு சினிமாக்காரர்களுக்கு பொள்ளாச்சி, தேனி பகுதி போன்ற கிராமங்கள் தான் படத்தின் லொகேஷன்களாக மாறியது.இயக்குனர் இமயம் பாரதி ராஜா தற்போது வயதின் காரணமாகப் படங்கள் இயக்குவதை குறைத்துக் கொண்டிருக்கிறார். படங்களில் முக்கிய வேடங்கள் ஏற்று நடித்து வருகிறார். 2013ம் ஆண்டு அன்னக்கொடி என்ற படத்தை இயக்கிய பிறகு அடுத்த கடந்த 2019ம் ஆண்டுதான் அடுத்த படத்தை மீண்டும் ஒரு மரியாதை என்ற பெயரில் இயக்கினார். அதில் முக்கிய வேடம் ஏற்றும் நடித்தார். தற்போது ராக்கி, மாநாடு, ஈஸ்வரன் போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

சென்னையில் நேற்று நடந்த சிம்புவின் ஈஸ்வரன் பட விழாவில் பாரதிராஜா கலந்து கொண்டார். உடல் நலம் சரியில்லை என்பதால் அவர் முதல் நபராக வாழ்த்தி பேசிவிட்டுப் புறப்பட்டார். அவர் கூறும்போது,இயக்குநர் பாரதிராஜா பேசும்போது, நான் பார்த்து வளர்ந்த பிள்ளை சிம்பு. நான் கேள்விப்பட்ட சிம்பு வேறு. நான் பார்த்துப் பழகிய சிம்பு வேறு. தங்கமான பையன். அவரைப் பற்றிச் சொன்னார்கள். ஆனால், 7 மணிக்குப் படப்பிடிப்பு என்றால் 6.45க்கே வந்துவிடு வார். இப்படம் விரைந்து முடிப்பதற்கு இதுவே உதாரணம். மிகவும் ஒழுக்கமானவர் சிம்பு. இப்படத்தின் பாடல்கள் எப்படி நன்றாக வந்திருக்கிறதோ அதுபோன்ற படமும் நன்றாக வந்திருக்கிறது. இப்படத்தின் இசை மிகவும் அருமையாக உள்ளது. நிதி அகர்வால் அருமையாகத் தமிழ் பேசுகிறார். அவருக்குச் சிறந்த எதிர்காலம் இருக்கிறது.

நந்திதா சிறப்பாக நடித்திருக்கிறார். மேலும், இப்படத்தில் நடித்த ஒவ்வொருவரும் நன்றாக நடித்தார்கள். படப் பிடிப்பில் இருப்பது போன்ற எண்ணமே தோன்றவில்லை. என் குடும்பத்தில் உள்ளவர்கள் என்று தான் தோன்றியது. ஒளிப்பதிவைப் பற்றி நான் சொல்ல வேண்டியதில்லை. நேர்த்தியான திறமைக்காரர் திரு. இப்படம் குடும்பபாங்கான படம். இப்படத்தைப் பொழுதுபோக்காகப் பார்க்காமல் குடும்பத்தோடு வந்து பாருங்கள்.
நாங்கள் அந்த காலத்தில் 27 நாட்களில் படத்தை முடித்திருக்கிறோம். ஆனால் இப்போது டிஜிட்டல் உலகத்தில் 28 நாட்களிலேயே எடுத்திருக்கிறார்கள் என்றால் அதற்கு இயக்குநர் சுசீந்திரனின் திறமை தான் காரணம். என் பிள்ளை மனோஜ் எனக்கு ஜுனியராக நடித்து நான் பார்த்த படம் ஈஸ்வரன் நெகிழ்ச்சியாக இருக்கிறது என்றார்.

You'r reading பிரபல இயக்குனர் கைவிடும் படம்.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை