வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்களுக்கான அமைச்சகம் இந்த ஆண்டில் சிறப்பாகச் செயல்பட்ட அரசு அமைப்புகளுக்கு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜானா விருதுகள் வழங்கி கௌரவித்தது.அந்தவகையில், விசாகப்பட்டினம் மாநகராட்சியைச் சிறப்பாகச் செயல்படும் உள்ளாட்சி அமைப்பாகத் தேர்வு செய்து உள்ளது.ஆந்திராவானது சிறந்த மாநிலப் பிரிவில் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.இதில் சிறந்த செயல்திறன் கொண்ட ஒரு நகராட்சி அமைப்பாக உத்திரப் பிரதேசத்தின் மிர்சாபூர் வென்றுள்ளது.வடகிழக்கு மற்றும் மலைப்பாங்கான மாநிலங்களின் கீழ் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா- நகர்ப்புறம் என்ற திட்டத்தைச் செயல்படுத்தியதில் சிறந்த செயல்திறன் கொண்ட மாநிலமாகத் திரிபுரா தேர்வு செய்யப்பட்டுள்ளது.
பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா என்ற திட்டம் "அனைவருக்கும் வீடு" வழங்குவதை
நோக்கமாகக் கொண்டுள்ளது.2022 ஆம் ஆண்டின் மார்ச் 31 ஆம் தேதிக்குள் 20 மில்லியன் நகர்ப்புற ஏழைகளுக்கு மலிவு விலையிலான வீடுகளை வழங்குவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.மேலும் பிரதமர் மோடி 2019-20 ஆம் ஆண்டைக் கட்டுமானத் தொழில்நுட்ப ஆண்டு' என அறிவித்துள்ளார்.