ஸ்ரீகாந்துடன் ஜோடி சேர்ந்த ஹீரோயின்..

by Chandru, Jan 3, 2021, 14:17 PM IST

ரோஜா கூட்டம் ஸ்ரீகாந்த் ஹீரோவாக தனது இடத்தை இன்னமும் தக்கவைத்துக் கொண்டிருக்கிறார். இவர் நடிக்கும் புதிய படம் எக்கோ. சைக்கலாஜிக்கல் திரில்லர் திரைப்படம்.இதில் முக்கிய வேடத்தில் ஆசிஷ் வித்யார்த்தி நடிக்கிறார். தில், கில்லி போன்ற படங்களில் போலீஸ் அதிகாரியாக மறக்கமுடியாத வேடத்தில் நடித்த ஆசிஷ் கடந்த சில வருடங்களாகத் தமிழ் பக்கம் தலைகாட்டாமல் இருந்தார். அதற்குக் காரணம் அவருக்கு ஒரே சாயலில் கதாபாத்திரங்கள் வந்ததுதான் காரணம் எனத் தெரிவிக்கிறார்.எக்கோவில் வித்தியாசமான வேடம் என்றதும் நடிக்க ஒப்புக் கொண்டார்.

இதில் ஸ்ரீநாத், கும்கி அஸ்வின் மற்றும் கதாநாயகியாக வித்யா பிரதீப் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.இப்படத்தை இன்டுடிவ் சினிமாஸ் சார்பில் டாக்டர். ராஜசேகர், ஹாரூன் ஆகியோர் இணைந்து தயாரிக்க, அறிமுக இயக்குநர் நவீன் கணேஷ் இயக்குகிறார்.
கடந்த அக்டோபரில் தொடங்கிய இந்த படத்தின் படப் பிடிப்பு சென்னையில் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. தெலுங்கில் விஜய் தேவரகொண்டாவுடன் 'துவாரகா', தமிழில் அதர்வாவுடன் 'ருக்குமணி வண்டி வருது' ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்த 'பூஜா ஜாவேரி' இந்த படத்தின் மற்றொரு நாயகியாக நடிக்கிறார்.

தற்போது பூஜா ஜாவேரி, ஸ்ரீகாந்த் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.
கில்லி, தூள், தடம் உள்ளிட்ட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ள கோபிநாத் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். ஜான் பீட்டர் இசையமைக்கிறார். சுதர்ஷன் படத்தொகுப்பு செய்ய, மைக்கேல் ராஜ் கலையை நிர்மாணிக்கிறார். ராதிகா நடனம் அமைக்க, டேஞ்சர் மணி சண்டைக்காட்சிகளை வடிவமைக்கிறார்.

You'r reading ஸ்ரீகாந்துடன் ஜோடி சேர்ந்த ஹீரோயின்.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை