பிரபல இயக்குனருக்கு கொரோனா தொற்று.. ஷூட்டிங் ரத்து..

Advertisement

கொரோனா லாக்டவுன் தளர்வு அறிவிக்கப்பட்டு சகஜ வாழ்க்கை மெல்லத் திரும்பும் நிலையிலும் கொரோனா பரவல் தொடர்ந்த வண்ணம் இருக்கிறது. கடந்த ஆண்டு மார்ச்சில் கொரோன லாக் டவுன் அறிவிக்கப்பட்டது. படப் பிடிப்புகள் ரத்து, போக்குவரத்து முடக்கம், தொழில் முடக்கம் எல்லாம் நடந்தது. மக்கள் நடமாட்டம் பெரும் பகுதி குறைந்த நிலையிலும் கொரோனா தொற்று நிலவியது.

திரையுலகில் அமிதாப்பச்சன், அபிஷேக் பச்சன், சரத்குமார், விஷால், கருணாஸ், டாக்டர் ராஜசேகர், நடிகைகள் ஐஸ்வர்யாராய், தமன்னா, நிக்கி கல்ராணி, ஐஸ்வர்யா அர்ஜூன், ஜீவிதா , ரகுல் ப்ரீத் சிங், இயக்குனர் எஸ்.எஸ்.ராஜ மவுலி எனப் பலர் கொரோனா பாதிப்புக்குள்ளானார்கள். கடந்த வாரம் நடிகர் ராம் சரண், வருன் தேஜ் போன்ற தெலுங்கு நடிகர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுத் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் ராம் சரண், அலியா பட் நடிக்கவிருந்த ஆர் ஆர் ஆர் படத்தின் ஷூட்டிங்கை இயக்குனர் ராஜமவுலி தள்ளிவைத்திருக்கிறார்.

இந்நிலையில் தமிழில் சிம்பு, அனுஷ்கா நடித்த வானம் படத்தை இயக்கிய டைரக்டர் கிரிஷ் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறார். இவர் தெலுங்கில் சமீபத்தில் வைஷ்ணவ் தேஜ் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பை முடித்தார். நாளை முதல் பவன் கல்யாண் நடிக்கும் படத்தை இயக்க திட்டமிட்டிருந்தார். முன்னதாக அவர் பாதுகாப்பு காரணமாக கொரோனா பரிசோதனை செய்துக்கொண்டார். அதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரிய வந்தது. தற்போது தனிமைப் படுத்தலில் இருக்கிறார் கிரிஷ். சிகிச்சை மேற்கொண்டு வரும் அவர் குணமாகி வருகிறார்.கொரோனா தொற்று திரையுலகில் பாலிவு, கோலிவுட், டோலிவுட் என எல்லா பகுதியிலும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 2 வாரங்களுக்கு முன் ஐதராபாத்தில் நடந்த அண்ணாத்த படப்பிடிப்பில் கொரோனா தொற்றால் 4 பேர் பாதிக்கப்பட்டனர்.

இதையடுத்து படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. அதில் நடித்த வந்த ரஜினிகாந்த் கொரோனா பரிசோதனை செய்துக்கொண்டார். ஆனாலும் அடுத்த நாள் அவருக்கு ரத்த அழுத்தத்தில் மாறுபாடு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு 3 நாள் சிகிச்சை பெற்று குணம் ஆகி சென்னை திரும்பினார். கடந்த டிசம்பர் 31ம் தேதி அவர் அரசியல் கட்சி தொடங்க உள்ளதாக அறிவித்திருந்தார். அண்ணாத்த படப்பிடிப்பில் ஏற்பட்ட பாதிப்புக்குப் பிறகு அரசியல் கட்சி தொடங்கும் எண்ணத்தை கைவிட்டார். தற்போது டாக்டர்கள் அறிவுரைப்படி ஓய்வில் இருக்கும் அவர் அண்ணாத்த படப்பிடிப்பில் மீண்டும் கலந்து கொள்வது பற்றி ஆலோசித்து வருகிறார்.

Advertisement
மேலும் செய்திகள்
don-t-want-to-answer-idiots-nayanthara-kattam-on-the-red-tea-issue
முட்டாள்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை... செம்பருத்தி டீ விவகாரத்தில் நயன்தாரா காட்டம்
coming-to-film-promotion-3-lakhs-to-give-actress-aparnitha-over-game
பட புரமோஷனுக்கு வரனுமா? 3 லட்சம் தரணும்... நடிகை அபர்ணிதா ஓவர் ஆட்டம்... சுரேஷ் காமாட்சி காட்டம்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?

READ MORE ABOUT :

/body>