மறைமலைநகரில் ஆறாக ஓடும் தொழிற்சாலை கழிவு நீர்

by Balaji, Jan 4, 2021, 19:37 PM IST

சென்னை மறைமலைநகர் தொழிற்சாலைகள் அதிகம் நிறைந்த பகுதி இங்கு ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட தனியார் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றது. மறைமலைநகர் காவல் நிலையம் அருகே உள்ள கார் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் கழிவுநீர் ரோட்டில் பால் போல வெள்ளை நிறத்தில் ஆறாக ஓடுகிறது. இதனால் பொதுமக்களுக்கும்வாகன ஓட்டிகளும் பெரும் இன்னலுக்கு ஆளாகின்றனர்.

இந்த கழிவு நீர் பிரச்னை தொடர்பாக நகராட்சியில் மக்கள் பல முறை புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சாலைகளில் ஓடும் கழிவுநீரால் துர்நாற்றம் வீசுகிறது. கழிவுநீரை சாலைகளில் வெளியேற்றும் தொழிற்சாலை நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மறைமலைநகர் பகுதிவாசிகள் மன்றாடுகின்றனர்

You'r reading மறைமலைநகரில் ஆறாக ஓடும் தொழிற்சாலை கழிவு நீர் Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை