குடிநீரில் கலந்தது கழிவுநீர் : கிராம மக்கள் மயக்கம்

by Balaji, Jan 5, 2021, 20:34 PM IST

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே கழிவுநீர் கலந்த குடிநீரை பருகிய கிராம மக்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது. தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே
புறவழிச்சாலை பகுதியில் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் குழாய் பதிக்கப்பட்டுள்ள இடத்தில் பாலம் கட்டுவதற்காக நேற்று ஜேசிபி இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டப்பட்டது. அப்போது குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதில் குடிநீருடன் சாக்கடை நீர் கலந்தது.

பேளாரஅள்ளி பகுதியில் உள்ள கிராம மக்கள் கழிவு நீ்ர் கலந்த குடிநீரை கவனிக்காமல் பருகியுள்ளனர். இதில் பலருக்கும் திடீரென வாந்தி மயக்கம் ஏற்பட்டது. உடனடியாக அவர்கள் தருமபுரி, மற்றும் பாலக்கோடு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதே போல் இந்த கிராமத்செம்ம நத்தம், எருமம்ப்பட்டி, கொட்ட பள்ளம், உள்ளிட்ட கிராம மக்களும் பாதிப்பிற்குள்ளாயினர்.

More Tamilnadu News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்