மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காடு கிராமத்தில் உள்ள நவகிரக புதன் ஸ்தலத்தில் சிவகங்கை எம்.பி கார்த்திக் சிதம்பரம் இன்று சாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது:கொரோனா காலத்தில் மக்களுக்கு நேரடியாகப் பணம் கொடுப்பது தவறில்லை. அரசாங்கம் இல்லாதவர்களுக்குக் கொடுக்க வேண்டும். இதனை முன்கூட்டியே கொடுத்திருக்க வேண்டும், கொரோனா காலத்திலேயே ஒரு குடும்பத்திற்கு 10 ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சி சார்பில் கோரிக்கை வைத்தோம்.வருகின்ற சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி அங்கம் வகிக்கும்.
பாராளுமன்றத் தேர்தலில் எப்படி வெற்றி பெற்றோம் அதேபோல இந்த தேர்தலிலும் மிகப்பெரிய வெற்றியைப் பெறுவோம்,எடப்பாடி பழனிச்சாமி ஒரு சரித்திர விபத்தால் வந்த முதலமைச்சர், மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் இல்லை. இந்த அரசு கண்டிப்பாக மாற்றப்படும். திமுக தலைமையில் புதிய அரசு அமையும். மூன்று மாத காலத்தில் ஸ்டாலின் கண்டிப்பாகத் தமிழகத்தின் முதல்வர் ஆவார். என கார்த்திக் சிதம்பரம் தெரிவித்தார்