நெய் மணக்க சூடான வெஜிடபிள் கிச்சடி செய்வது எப்படி?? வாங்க பார்க்கலாம்..

வெஜிடபிள் சாப்பிடுவதால் நமது உடலுக்கு முக்கியமாக தேவைப்படும் ஆரோக்கிய சத்துக்கள் நமக்கு கிடைக்கின்றது. இதனால் நாம் சாப்பிடும் போது வெஜிடபிள் சேர்த்து கொள்வது முக்கியம். வெஜிடபிள் சேர்த்து சுவையான கிச்சடி செய்வது குறித்து பார்க்கலாம்..

தேவையான பொருள்கள்:-
பாசிப் பருப்பு -3/4 கப்
அரிசி -1/4 கப்
தக்காளி -1
கேரட் -1 கப்
முட்டைக்கோசு -1 கப்
பட்டாணி -1 கப்
குடை மிளகாய் -1/2 கப்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 ஸ்பூன்
பச்சை மிளகாய் -1
நெய் -1 ஸ்பூன்
கொத்தமல்லி இலை -சிறிதளவு
உப்பு -தேவையான அளவு
மிளகாய் பொடி -தேவையான அளவு
மஞ்சள் -1/2 ஸ்பூன்
பெருங்காயம் -தேவையான அளவு
சீரகம் -1 ஸ்பூன்

செய்முறை:-
அடுப்பில் ஒரு குக்கரை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி பாசிப் பருப்பை வறுத்து கொள்ளவும். பிறகு அலசிய அரிசியை பருப்பில் சேர்த்து தண்ணீர், மஞ்சள் மற்றும் தேவையான உப்பு சேர்த்து 6 முதல் 7 விசில் வரும் வரை குக்கரை மூடி வைத்து கொள்ள வேண்டும். ஒரு வாணலியை வைத்து அதில் நெய், பெருங்காயம், சீரகம், பட்டாணி மற்றும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி கொள்ள வேண்டும்.

பின்னர் அதில் நறுக்கிய குடை மிளகாய் மற்றும் சேர்க்க வேண்டிய அனைத்து காய்கறிகளையும் சேர்த்து வதக்கவும். காரத்திற்கு நறுக்கிய பச்சை மிளகாய், மிளகாய் தூள் ஆகியவை சேர்த்து 5 நிமிடம் வேக வைக்கவும். பிறகு காய்கறி கலவையை பருப்பில் சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு நன்றாக கலந்து கொள்ளவும். கடைசியில் நெய் ஊற்றினால் சுவையான கிச்சடி தயார்..

Advertisement
மேலும் செய்திகள்
how-to-cook-andra-pepper-chicken
காரசாரமான சுவையான ஆந்திரா நாடு பெப்பர் சிக்கன் ரெசிபி..! சூப்பர் டேஸ்ட்.. மிஸ் பண்ணிடாதீங்க
how-to-make-kovaikkai-masalapath-recipe
சுவையான கோவைக்காய் மசாலாபாத் செய்வது எப்படி?? வாங்க பார்க்கலாம்..
how-to-cook-cauliflower-soup
அருமையான வெயிட் லாஸ் ட்ரிங்க்! காலிஃபிளவர் சூப் செய்வது எப்படி? வாங்க சமைக்கலாம்..
how-to-make-saththu-mavu
இனி வீட்டிலே சத்துமாவு தயாரிக்கலாம்! கெமிக்கல் கலந்த மாவுக்கு குட்பை சொல்லுங்கள்..
how-to-make-pepper-chicken
காரசாரமான ஆந்திரா நாடு பெப்பர் சிக்கன் செய்வது எப்படி??
how-to-make-ragi-samiya-cutlet
சுவையான ராகி சேமியா கட்லெட் செய்வது எப்படி??
how-to-make-rava-potato-finger-fry
சுவையான.. கிரிஸ்பியான.. ரவா உருளைக்கிழங்கு ஃபிங்கர் ஃபிரை செய்வது எப்படி?
how-to-make-cucumber-pachadi
உடல் எப்பொழுதும் குளு குளுன்னு இருக்க இதை சாப்பிடுங்க..!
how-to-make-neem-tea
சர்க்கரை நோய் முழுவதும் குணமாக வேப்பம் டீ குடியுங்க..
how-to-make-capsicum
சப்பாத்திக்கு ஏற்ற குடைமிளகாய் தொக்கு செய்வது எப்படி??

READ MORE ABOUT :