சர்க்கரை ஆலையால் சங்கடம் : 5 ஆயிரம் டன் கரும்பு தேக்கம்

by Balaji, Jan 7, 2021, 18:46 PM IST

மதுராந்தகம் அருகே கரும்பு ஆலையில் ஏற்பட்ட பழுது காரணமாக 5,000 டன் கரும்பு தேங்கி உள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம்
மதுராந்தகம் அருகே உள்ள படாளத்தில் கூட்டுறவு சர்க்கரை ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலைக்கு காஞ்சிபுரம், செங்கல்பட்டு, உத்திரமேரூர், திருக்கழுக்குன்றம், மதுராந்தகம், திருப்போரூர் ஆகிய வட்டாரத்தை சேர்ந்த சேர்ந்த கரும்பு விவசாயிகளும், புதுச்சேரியில் இருந்தும் கரும்பு அறவைக்கு கொண்டுவரப்படுகிறது. இந்த ஆலையில் திடீரென ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக ஆலை கடந்த 4 நாட்களாக இயங்கவில்லை.

ஆலையின் பிரதான பணியான கரும்பு அரவை நிறுத்தப்பட்டதால் சுமார் 5 ஆயிரம் டன் கரும்பு தேக்கம் அடைந்துள்ளது இதனால் விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர். கரும்பை லாரிகளிலும் டிராக்டர் களிலும் ஏற்றி வந்த விவசாயிகள் அதனை அறைக்கு வெளியே இழுத்து விட்டு வேதனையுடன் காத்திருக்கின்றனர். இதனால் விவசாயிகள் மட்டுமல்லாது கரும்புகளை ஏற்றி வந்த வாகன ஓட்டிகளும் காத்திருப்பது என்ற கேள்விக்கு விடை தெரியாமல் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

You'r reading சர்க்கரை ஆலையால் சங்கடம் : 5 ஆயிரம் டன் கரும்பு தேக்கம் Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை