தமிழக சட்டமன்றத் தேர்தல் தொடர்பாக மத்திய உள்துறை செயலருடன் இந்திய தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தியுள்ளது. தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் வரவுள்ளது. வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் தேர்தல் வரும் என்று எதிர்பார்க்கிறது. இதனையடுத்து, ஆட்சியை தக்க வைக்க அதிமுகவும், ஆட்சியை பிடிக்க திமுகவும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது.
இதனைபோல், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். இதற்கிடையே, தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடத்துவது குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரியுடன் அவப்போது இந்திய தலைமை தேர்தல் அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், டெல்லியில், தமிழக சட்டமன்றத் தேர்தல் தொடர்பாக மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லாவுடன் இந்திய தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தியுள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழகம், புதுச்சேரி, மேற்குவங்கம், அசாம், கேரளா ஆகிய 5 மாநிலங்களில் ஏப்ரல், மே மாதங்களில் சட்டமன்ற தேர்தலை நடத்த முடிவு செய்துள்ளனர். பிற 4 மாநிலங்களில் தேர்தல் எப்படி நடந்தாலும், தமிழக சட்டமன்ற தேர்தல் முக்கியத்துவமாக பார்க்கப்படுகிறது.