சமஸ்கிருத செய்தி வேண்டாமா.. டிவியை ஆப் பண்ணுங்க: தலைமை நீதிபதி காட்டம்

by Balaji, Jan 18, 2021, 19:50 PM IST

பொதிகை டி. வியில் தினமும் 15 நிமிடம் ஒளிபரப்பாகும் சமஸ்கிருத செய்தி அறிக்கையை ரத்து செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கில் தேவைப்பட்டால் சேனலை மாற்றிக் கொள்ளுங்கள் அல்லது டிவியை ஆப் பண்ணுங்க என்று நீதிபதிகள் கடுமையான விமர்சனங்களை வைத்து வழக்கை முடித்து வைத்தனர்மத்திய அரசின் தூர்தர்ஷன் தொலைக்காட்சியின் தமிழ் அலை வரிசையான பொதிகை டிவியில் கடந்த டிசம்பர் 1 முதல் தினமும் 7 மணிக்கு 15 நிமிடங்கள் சமஸ்கிருத மொழியில் செய்தி அறிக்கை ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தமிழகத்தில் வெறும் 803 பேர் சமஸ்கிருதம் பேசுபவர்கள் உள்ளனர். அப்படியிருக்க 15 நிமிட சமஸ்கிருத செய்தி அறிக்கையை கட்டாயமாக நடைமுறைப்படுத்தியுள்ளது ஏற்கக் கூடியதல்ல. ஆகவே பொதிகை டி. வியில் 15 நிமிட சமஸ்கிருத செய்தி அறிக்கைக்கு தடை விதித்து உத்தரவிட வேண்டும் என மதுரை அண்ணாநகரைச் சேர்ந்த முத்துக்குமார் என்பவர், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, மதுரைக்கிளை நிர்வாக நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு, மனுதாரருக்கு தேவையில்லை எனில் தொலைக்காட்சியை அணைத்து வைத்துக் கொள்ளலாம். அல்லது சேனலை மாற்றிக்கொள்ளலாம். இதனை விட பல முக்கியமான பிரச்சனைகள் உள்ளன. தேவையெனில் மனுதாரர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு அளித்து நிவாரணம் தேடிக்கொள்ளலாம் என்று கூறி வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

You'r reading சமஸ்கிருத செய்தி வேண்டாமா.. டிவியை ஆப் பண்ணுங்க: தலைமை நீதிபதி காட்டம் Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை