22 மாவட்டங்களில் புதிய கொரோனா பாதிப்பு 10க்கும் கீழ் குறைந்தது..

Advertisement

கள்ளக்குறிச்சி, கடலூர், திண்டுக்கல் உள்பட 22 மாவட்டங்களில் நேற்று புதிதாக கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 10க்கும் கீழ் சென்றது.சீனாவில் இருந்து கொரோனா வைரஸ் நோய் இந்தியா உள்படப் பல நாடுகளுக்குப் பரவியது. இந்தியாவில் ஒரு கோடியே 6 லட்சம் பேருக்குப் பரவியிருக்கிறது. மகாராஷ்டிரா, ஆந்திரா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் அதிகமானோருக்கு நோய் பாதித்தது. தமிழ்நாட்டில் கடந்தாண்டு ஏப்ரல் மாதத்தில் பரவத் தொடங்கிய கொரோனா தொற்று நோய், அக்டோபர் மாதத்திற்குப் பிறகு குறையத் தொடங்கியது.

தற்போது பல மாவட்டங்களில் புதிதாக கொரோனா பாதிப்பவர்கள் எண்ணிக்கை 10க்கும் கீழ் குறைந்து விட்டது. மாநிலம் முழுவதும் தினமும் சுமார் 50 ஆயிரம் முதல் 60 ஆயிரம் பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகிறது. தமிழக அரசு நேற்று(ஜன.20) மாலை வெளியிட்ட அறிக்கையின்படி, புதிதாக 549 பேருக்குத் தொற்று கண்டறியப்பட்டது. இவர்களைச் சேர்த்து, மாநிலம் முழுவதும் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்து 32,415 ஆக உயர்ந்தது.

மாநிலம் முழுவதும் மருத்துவமனைகளில் இருந்து நேற்று டிஸ்சார்ஜ் ஆன 713 பேரையும் சேர்த்து, இது வரை 8 லட்சத்து 14,811 பேர் குணம் அடைந்துள்ளனர். நோய்ப் பாதிப்பால் நேற்று 9 பேர் பலியானார்கள். இதையடுத்து, பலியானவர்களின் எண்ணிக்கை 12,290 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 5314 பேர் சிகிச்சையில் உள்ளார்கள். தினமும் சராசரியாக 700 பேர் குணம் அடைந்து வருவதாலும், புதிய பாதிப்பு 600க்கு கீழ் குறைந்து வருவதாலும் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை குறைந்து வருகிறது. சென்னையில் நேற்று புதிதாக 150 பேருக்கும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 46 பேருக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் 20 பேருக்கும், கோவை மாவட்டத்தில் 54 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. மற்ற மாவட்டங்களில் புதிதாகத் தொற்று பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. கள்ளக்குறிச்சி, தர்மபுரி, பெரம்பலூர், திருப்பத்தூர், கடலூர், திண்டுக்கல், கரூர், புதுக்கோட்டை உள்பட 22 மாவட்டங்களில் நேற்று புதிதாக கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 10க்கும் கீழ் குறைந்துள்ளது.

Advertisement
மேலும் செய்திகள்
actress-mahalakshmi-s-husband-ravinder-is-in-trouble-again
சிக்கிய பென் டிரைவ்,ஆவணங்கள்... நடிகை மகாலட்சுமியின் கணவர் ரவீந்தருக்கு மீண்டும் சிக்கல்
he-broke-his-promise-so-we-broke-up-ramarajan-open-talk-on-nalini
சத்தியம் செய்ததை மீறினார்... அதனால் பிரிந்தோம்- நளினி குறித்து ராமராஜன் ஓபன் டாக்
hospital-built-by-napoleon-grandfather-greeted-the-boy
நெப்போலியன் கட்டிய மருத்துவமனை... நீ நடப்பாய் சிறுவனை வாழ்த்திய பெரியதம்பி தாத்தா.... வாக்கு பலித்த அதிசயம்
prime-minister-light-house-plan-chennai
பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்
singarach-chennai-2-0-football-ground-laid-foundation
“சிங்காரச் சென்னை 2.0” செயற்கை புல் கால்பந்து மைதானம்
new-restriction-imposed-from-tomorrow
இதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா? – புதிய கட்டுப்பாடுகள் என்ன?
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
local-trains-doesn-t-function-from-tomorrow
புறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!

READ MORE ABOUT :

/body>