சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா அவர்கள் நான்கு வருடம் பெங்களூரில் உள்ள அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். இவரது தண்டனை காலம் வருகின்ற 27 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இவரை வரவேற்க வெளியே அவரது தொண்டர்கள் பல அயுத்தமான வேலைகளை செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று சிறையில் இருந்த சசிகலாவுக்கு திடீரென்று மூச்சுத்திணறல் எற்பட்டுள்ளது. இதனால் சிறை வளாகத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
பிறகு பெங்களூரு பேரிங் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார். சசிகலாவிற்க்கு ஒரு வாரமாக லேசான காய்ச்சல், இருமல் இருந்ததால் கொரோனா பரிசோதனை செய்ய்யபட்டது. ஆனால் ரிசல்ட்டில் நெகட்டிவ் வந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் நள்ளிரவில் மீண்டும் சசிகலாவிற்க்கு மூச்சுத்திணறல் எற்பட்டுள்ளது. இதனால் ஐசியுவில் தீவிர கண்காணிப்பில் உள்ளார். இதையடுத்து சசிகலாவின் உறவினர்கள் பெங்களூருக்கு படையெடுத்துள்ளனர்.