பிரபாஸ் திருமணம் எப்போது? சீனியர் நடிகர் அதிருப்தி..

Advertisement

பாகுபலி படத்தில் பிரபாஸ், அனுஷ்கா ஜோடி பிரபலமானாலும் அதற்கு முன்பே இவர்கள் இணைந்து தெலுங்கு படங்களில் ஜோடியாக நடித்துள்ளனர். பாகுபலி படத்துக்குப் பிறகு பிரபாஸ், அனுஷ்கா ஜோடி பற்றி தீவிரமாக காதல் கிசுகிசு பரவியது. இருவரும் பல இடங்களில் ஜோடியாகக் காணப்பட்டனர். சினிமாவில் இணைந்த இந்த ஜோடி இருவரது ரசிகர்களும் இவர்கள் வாழ்விலும் இணைய வேண்டும் என்றும் விரும்பி மெசேஜ் பகிர்ந்து வந்தனர்.இயக்குனர் எஸ்.எஸ்.ராஜ மவுலி இல்லத்திருமணம் ஒன்றிலும் பிரபாஸ், அனுஷ்கா புதுமண ஜோடிபோல் கலந்து கொண்டு அருகருகே நின்று ஆசி கூறினர்.

இதையடுத்து அவர்கள் காதல் திருமணம் செய்யவிருப்பதாகவும் தகவல் பரவியது. ஆனால் அனுஷ்கா இதனை மறுத்து வந்தார். நாங்கள் இருவரும் நண்பர்கள் மட்டுமே எங்களுக்குள் காதல் இல்லை என்றார். காதல் இல்லை என்று அனுஷ்காவின் உதடு உச்சரித்தாலும் உள்ளம் காதலால் துடித்துக் கொண்டிருக்கிறது என்பது அவர் பிரபாஸுக்காக பிறந்த நாளில் வெளியிடும் மெசேஜில் சிக்னல் காட்டுகிறார்.

கடந்த அக்டோபர் மாதத்தில் பிரசாந்த் பிறந்தநாள். அப்போது அவர் நடிக்கும் ராதே ஷ்யாம் படக் குழு ஸ்பெஷல் மோஷன் போஸ்டரை வெளியிட்டது. அதில் பிரபாஸ், பூஜா ஹெக் டே காதலில் லயித்திருப்பது போன்ற காட்சி இடம் பெற்றிருந்தது.அந்த போஸ்டரை அனுஷ்கா வெளியிட்டு அதில் தன்னுடைய காதலைக் குழைத்து மெசேஜ் பகிர்ந்திருக்கிறார். மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி பப்ஸு (பிரபாஸுக்கு அனுஷ்கா வைத்த செல்லப்பெயர்).. முழுவதும் காதல். ராதே ஷ்யாம் ஸ்டிலும் உணர்வும் தோற்றமும் ஒட்டு மொத்த காதல்.. ஆவலாக எதிர்பார்க்கிறேன். இயக்குனர் ராதா கிருஷ்ணா, பூஜா ஹெக்டே உங்களின் நடத்திர தேர்வு படக் குழு எல்லாமே ரொம்பவும் சிறப்பு எனத் தெரிவித்திருந்தார்.பிரபாஸுக்கு 41வது வயது ஆகிறது. இன்னமும் பிரமச்சாரியாக இருக்கிறார்.

அனுஷ்காவுக்கு 38 வயதாகிறது. அவரும் இன்னும் பிரமச்சாரிதான் இருவருக்கும் குடும்பத்தினர். எத்தனையோ மணமகளும், மணமகனும் பார்த்து இருவரை திருமணம் செய்துக் கொள்ள வலியுறுத் தியும் இருவருமே திருமணத் துக்கு ஓகே சொல்லவில்லை. அனுஷ்கா, பிரபாஸ் காதலுக்கு குடும்பத்தினர் தடையாக இருப்பதே இவர்கள் இருவரும் திருமணம் செய்யாமல் வைராக்கியமாக இருப்பதற்கு முக்கிய காரணம் என்றும் திரையுலகில் ஒரு பேச்சு உள்ளது. பிரபாஸ் திருமணம் செய்யமலிருப்பது பற்றி சீனியர் நடிகர் கிருஷ்ணம் ராஜு அதிருப்தி வெளியிட்டிருக்கிறார். கிருஷ்ணம் ராஜூ 1966ம் ஆண்டு தெலுங்கு படங்களில் நடிக்கத் தொடங்கினார். இன்னமும் நடித்து வருகிறார். இவருக்கு 80 வயது ஆகிறது.

தற்போது பிரபாஸ் நடிக்கும் ராதே ஷ்யாம் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இவரிடம் பிரபாஸ் திருமணம் செய்யாமலிருப்பது பற்றிக் கேட்டபோது,பிரபாஸ் எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாகத் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்றார். கிருஷ்ணம் ராஜு வெளியிட்ட கருத்திலிருந்து பிரபாஸ் 41 வயதாகியும் திருமணம் செய்யாமலிருப்பதால் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியதாக ரசிகர்கள் கருதுகின்றனர்.

Advertisement
மேலும் செய்திகள்
don-t-want-to-answer-idiots-nayanthara-kattam-on-the-red-tea-issue
முட்டாள்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை... செம்பருத்தி டீ விவகாரத்தில் நயன்தாரா காட்டம்
coming-to-film-promotion-3-lakhs-to-give-actress-aparnitha-over-game
பட புரமோஷனுக்கு வரனுமா? 3 லட்சம் தரணும்... நடிகை அபர்ணிதா ஓவர் ஆட்டம்... சுரேஷ் காமாட்சி காட்டம்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?

READ MORE ABOUT :

/body>