அக்காவின் உயிருக்கு ஆபத்து: சசிகலாவின் தம்பி கதறல்..

உடல்நலம் சரியில்லை என்று தெரிந்தும் உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்காமல் காலம் தாழ்த்தி வருவதால் எனது அக்காவின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கிறது என்று சசிகலாவின் தம்பி திவாகரன் தெரிவித்திருக்கிறார்.

by Balaji, Jan 21, 2021, 10:52 AM IST

பெங்களூரு சிறையில் இருந்து சசிகலாவுக்கு நேற்று திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அவரை உடனடியாக அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மீண்டும் சிறைக்குக் கொண்டு வந்தனர். பின்னர் நள்ளிரவில் ஒரு மணிக்கு மீண்டும் மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் மீண்டும் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.சசிகலாவுக்கு மேற்கொள்ளப்பட்ட இரண்டு விதமான பரிசோதனைகளிலும் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்று உறுதியாகியிருக்கிறது.இருப்பினும் அவருக்கு மூச்சுத்திணறல் இருப்பதால் ஆக்சிஜன் உதவியுடன் பெங்களூரு அரசு மருத்துவமனையில் தொடர் சிகிச்சையளிக்கப்படுகிறது என மருத்துவர் மனோஜ் தெரிவித்திருக்கிறார். சசிகலாவின் உடல்நிலை சீராக உள்ளது எனவும், தொடர்ந்து மருத்துவ சிகிச்கைகள் தேவைப்படுவதாகவும் மனோஜ் தகவல் கூறினார்.

இதனிடையே விடுதலையாகவிருந்த நிலையில் சசிகலாவின் உயிருக்கு ஆபத்து எனச் சந்தேகம் ஏற்பட்டுள்ளது என அவரது தம்பி திவாகரன் தெரிவித்திருக்கிறார்.அவருக்குக் கடந்த ஒரு வாரமாகக் காய்ச்சல் இருந்துள்ளது. ஆனால் சிறையில் சரியான சிகிச்சை தரவில்லை. நேற்று மாலை மூச்சுத்திணறல் ஏற்பட்ட பிறகுதான் சிறை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு இருக்கிறார் . சிறை மருத்துவமனையில் சாதாரண எக்ஸ்ரே மட்டுமே எடுத்துள்ளனர். தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிடி ஸ்கேன் எடுக்க சிறை அதிகாரிகள் மறுத்து விட்டதாகவும் கோர்ட்டு அனுமதி இருந்தால்தான் நம் தனியார் மருத்துவமனைக்குச் செல்ல முடியும் என்று அவர்கள் சொல்லிவிட்டார்கள் இப்போது கோர்ட்டில் அனுமதி வாங்கி எப்போது சிகிச்சையை மேற்கொள்வது?
சசிகலா 27-ம் தேதி விடுதலையாக உள்ள நிலையில் சரியாகச் சிகிச்சை தராமல் தாமதப்படுத்துகின்றனர். இது எங்களுக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கிறது அவரை விடுதலை ஆகாமல் ஏதாவது செய்ய வேண்டும் என்ற நோக்கில் திட்டமிட்டு இப்படி நடப்பதாகத் திவாகரன் சொல்லியிருக்கிறார்.

You'r reading அக்காவின் உயிருக்கு ஆபத்து: சசிகலாவின் தம்பி கதறல்.. Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை