பெங்களூரில் உள்ள விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சசிகலா, அதிகாரப்பூர்வமாக விடுதலை செய்யப்பட்டுள்ளதாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்தார்.சசிகலா அதிகாரப்பூர்வமாக விடுதலை செய்யப்பட்டுள்ளார். இங்குள்ள மருத்துவர்கள் அவரை எப்போது அழைத்துச் செல்வது எனச் சொல்கிறார்களோ, அதன் பின்னரே அவரை சென்னைக்கு அழைத்துச் செல்ல இருக்கிறோம். அது வரை சசிகலாவிற்கு இங்கேயே சிகிச்சை அளிக்க முடிவு செய்துள்ளோம் .
தமிழக மக்கள் சசிகலாவின் வருகையை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டுள்ளனர், எனவே தமிழகம் வரும்போது அவருக்குச் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படும் சசிகலா விடுதலையாகும் நாளன்றே ஜெயலலிதா நினைவு மண்டபம் திறக்கப்படுவதில் உள்நோக்கம் உள்ளதா என்ற கேள்விக்கு சசிகலா விடுதலையைச் சென்னையிலும் அவர்கள் கொண்டாடுவதாகவே நான் பாசிட்டிவாக பார்க்கிறேன் என்றார்.
அமமுக, அதிமுக இணைய வாய்ப்பு உள்ளதா? என்ற கேள்விக்கு நான் இங்கு அரசியல் பேச விரும்பவில்லை. சசிகலா விடுதலையானதில் ய மகிழ்ச்சியாக இருக்கிறோம் . அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் ஆரம்பிக்கப்பட்டதே, அதிமுகவை மீட்டெடுக்க வேண்டும், ஜெயலலிதாவின் ஆட்சியை மீண்டும் உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான். எனவே அதற்கான முயற்சி எடுத்து வருகிறோம் என்றார்