விளையாட்டு வீரர்களுக்கு இரயில்வேயில் வேலை!

Advertisement

தென்கிழக்கு மத்திய இரயில்வேயிலிருந்து காலியாக உள்ள பல்வேறு பணிகளுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள விளையாட்டு வீரர்களிடம் இருந்து கீழ்க்காணும் தகவல்களைப் படித்து 23.02.2021க்குள் விண்ணப்பிக்கலாம்.

மொத்த பணியிடங்கள்: 26

கல்வி தகுதி:

Level 2 and Level 3 – 12வது தேர்ச்சி அல்லது 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் தொழிற்பயிற்சி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Level 4 –இளநிலை அறிவியல் துறையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Level 5 –ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தட்டச்சு திறன் - ஆங்கிலத்திற்கு 30 வார்த்தைகள் நிமிடத்திற்கு என்றவாறும், ஹிந்திக்கு 25 வார்த்தைகள் நிமிடத்திற்கு என்றவாறும் இருக்க வேண்டும்.

வயது: 01.07.2021ம் தேதியின் படி 18 முதல் 25 வயது வரை.

பொது விண்ணப்பதாரர்கள் – ரூ.500/- (வங்கி கட்டணங்களைப் பிடித்ததன் பின்னர் ரூ.400/- வரை திரும்பி வழங்கப்படும்)

SC/SCA/ST விண்ணப்பதாரர்கள் – ரூ.100/- (வங்கி கட்டணங்களைப் பிடித்ததன் பின்னர் முழு கட்டணம் திரும்பி வழங்கப்படும்.)

தேர்ந்தெடுக்கும் முறை:

விளையாட்டு திறன், உடற்தகுதி மற்றும் பயிற்சியின் போது பயிற்சியாளரின் மதிப்பீடு என 40 மதிப்பெண்கள் வழங்கப்படும்.

விளையாட்டுத் துறையில் வெற்றி பெற்ற அளவீடுகளுக்கு ஏற்றவாறு 50 மதிப்பெண்கள்.

கல்வி தகுதிக்கு ஏற்றவாறு 10 மதிப்பெண்கள்.

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் Online மூலம் 23.02.2021க்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இந்த பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பாணை இத்துடன் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

Advertisement

READ MORE ABOUT :

/body>