அரசியல் லாபத்திற்காக எந்த ஒரு சமுதாயத்திற்கும் தனியாக இந்த அரசு இட ஒதுக்கீடு போன்ற சலுகைகளை அறிவித்தால் ஒட்டுமொத்த பிற்படுத்தப்பட்டோர் சமுதாயமும் முக்குலத்தோர் சமுதாயமும் இணைந்து இதுவரை கண்டிராத ஒரு போராட்டத்தை தமிழகம் சந்திக்கும் விருதுநகரில் முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் தெரிவித்தார்.விருதுநகரில் இன்று கருணாஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது.இப்போது வரை நாங்கள் அதிமுக கூட்டணியில்தான் உள்ளோம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்து பரப்புரையில் உள்ளதால் அவரை சந்திக்க இயலவில்லை.தற்போது கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டுள்ளது.
சில கட்சிகள் கூட்டணியை துவக்கி உள்ளனர். சில கட்சிகள் பேரங்களை ஆரம்பித்துள்ளனர் மக்கள் அதை கவனித்துக் கொண்டுதான். உள்ளார்கள். முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கூட்டணி கட்சிகளையும் எங்களைப் போன்ற இயக்கங்களையும் அழைத்து பேசினால் தான் கூட்டணி முடிவாகும்.உங்களுக்கு கூடுதல் சீட் வழங்கவில்லை என்றால் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என கேள்விக்கு அரசியல் எனக்கு தொழில் அல்ல.அரசியலை வைத்து வியாபாரம் செய்யக்கூடிய கீழ்தரமான சிந்தனையும் எனக்கு கிடையாது.
நான் சார்ந்த முக்குலத்தோர் சமுதாய இளைஞர்கள் மற்ற சமுதாயத்தை போல் இட ஒதுக்கீடு பெற்று குறிப்பாக பிற்படுத்தப்பட்ட மக்கள் மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டு மற்ற சமுதாயத்துக்கு வழங்கப்படுவது போல் ஜெயலலிதா 1994 ல் கள்ளர் மறவர்,அகமுடையர் ஒன்றிணைத்து தேவர் சமுதாயம் என அறிவித்தார். முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிஅதை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும்.பா.ம.க இட ஒதுக்கீடு கேட்டு போராட்டம் நடத்துவது போல் முக்குலத்தோர் புலிப்படை போராட்டம் நடத்துமா என்ற கேள்விக்கு இந்திய அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்ட சமுதாய மக்கள் தங்கள் உரிமைகளை கேட்டு போராடுவதில் அவர்களுக்கு உரிமை உள்ளது அந்த அடிப்படை சித்தாந்தத்தில் எங்களுக்கும் அந்த உரிமை உள்ளது எங்கள் உரிமைகளை கேட்கக்கூடாது என சொல்வதற்கு யாருக்கும் அதிகாரமும் அருகதையும் கிடையாது.
நாங்கள் 26 ஆண்டுகள் கோரிக்கையாக ஜெயலலிதா கையெழுத்திட்டு உத்தரவிட்ட அரசாணையையும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதுதான் எங்களுடைய கோரிக்கை. அந்த கோரிக்கை நிராகரிக்கப்படும் பட்சத்தில் அரசியல் சுயநலத்திற்காக யாராவது ஒரு சமுதாயத்திற்கு தனியாக இந்த அரசு ஏதாவது அறிவிக்குமேயானால் தமிழகத்தில் ஒட்டுமொத்த பிற்படுத்தப்பட்டோர் சமுதாயமும் முக்குலத்தோர் சமுதாயமும் இணைந்து தமிழகம் இதுவரை காணாத ஒரு போராட்டத்தை காண நேரிடும் என்றார்.