சேலம் சித்த வைத்தியர் சிவராஜ் சிவகுமார் காலமானார்...

சேலத்தை தலைமையகமாக கொண்டு இந்தியாவில் 7 தலைமுறைகளாக, 206 வருடங்களுக்கு மேலாக சித்த மருத்துவத்தில் ஈடுபட்டு வருகின்றனர் சேலம் சிவராஜ் சித்த வைத்தியர் பரம்பரையினர்.டாக்டர் சிவராஜ் சிவகுமார் இவர் ஆண்மைக் குறைவு, நரம்புத் தளர்ச்சிக்கான சித்த மருத்துவத்தில் பிரபலமானவர். ஆரம்பக் காலத்தில் பத்திரிகை மட்டும் விளம்பரம் செய்து ஊர்ஊராக லாட்ஜ்களில் தங்கி சிகிச்சை அளித்து வந்த இவர்கள் சாட்டிலைட் சேனல்கள் தலைதூக்கியது முதல் தங்களது டிராக்கை மாற்றிக்கொண்டு சேலத்தில் மட்டுமே சிகிச்சை அளித்து வந்தனர்.

நோயாளிகளின் கேள்விகளுக்கு டிவி நிகழ்ச்சிகள் மூலம் விளக்கம் அளித்து அதன் பின் அவர்களை சேலத்திற்கு வரவழைத்து வைத்தியம் செய்து வந்தனர் .அதிலும் குறிப்பாக டிவி நிகழ்ச்சிகளின் மூலம் உச்சத்தைத் தொட்டவர் சிவராஜ் சிவகுமார் .இவரது நிகழ்ச்சிகளை சகட்டுமேனிக்கு குறை கூறி இவருக்கு போன் மூலமும் கடிதம் மூலமும் அர்ச்சனை செய்பவர்கள் ஏராளம். அப்படி வரும் விமர்சனங்களையும் தாங்கிக் கொண்டு அடுத்த நிகழ்ச்சியில் அதுக்கு பதில் அளிப்பார் ஏன்டா என் பேராண்டிகளா.. இந்த தாத்தா சொல்றேன் கேளுங்கள் டா .. வாலிப வயசில் தப்பு.. பண்ணாதீங்கடா.. இப்படி செய்யாதீங்கடா.. என்று கோபமாய் சொல்லுவார். நான் சொல்வதைக் கேட்காவிட்டால் நீங்கள் நாசமாகப் போவீர்கள். உருப்படவே மாட்டீர்கள்..உங்கள் உடம்பு பலவீனமாகிவிடும்.. அப்புறம் உங்களால் இல்வாழ்க்கையில் ஈடுபடவே முடியாது என்று சகட்டு மேனிக்குத் திட்டுவார்.

அடுத்த நொடிகளில் உங்கள் மேல் இருக்கும் அக்கறையில்தானடா இந்த தாத்தா இப்படிச் சொல்கிறேன் . தாத்தா வயது கொண்ட நான் சொல்வதைக் கேளுங்கடா.. என்றெல்லாம் இவர் பேசுவது சிரிப்பை வரவழைக்கும். இதற்காகவே இவரது நிகழ்ச்சிகளைப் பலரும் விரும்பி பார்த்ததுண்டு. எனக்கு உங்களிடம் கோபித்துக் கொள்ள உரிமை இருக்கிறது என்றும் அடிக்கடி சொல்வார்.கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவு காரணமாக இவர் டிவி நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. தனது மருத்துவமனையிலேயே சிகிச்சை பெற்று வந்த சிவராஜ் சிவகுமார், சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை. 12.30 மணி அளவில் மரணம் அடைந்தார் .

அவரின் உடல் சேலம் சிவதாபுரத்திலுள்ள, அவரின் பூர்விக வீடான அகஸ்தியர் மாளிகையில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. ஏராளமான ' பேரப்பிள்ளைகள் ' அவருக்குக் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.அவரின் மறைவிற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் முக்கிய பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement
மேலும் செய்திகள்
actress-mahalakshmi-s-husband-ravinder-is-in-trouble-again
சிக்கிய பென் டிரைவ்,ஆவணங்கள்... நடிகை மகாலட்சுமியின் கணவர் ரவீந்தருக்கு மீண்டும் சிக்கல்
he-broke-his-promise-so-we-broke-up-ramarajan-open-talk-on-nalini
சத்தியம் செய்ததை மீறினார்... அதனால் பிரிந்தோம்- நளினி குறித்து ராமராஜன் ஓபன் டாக்
hospital-built-by-napoleon-grandfather-greeted-the-boy
நெப்போலியன் கட்டிய மருத்துவமனை... நீ நடப்பாய் சிறுவனை வாழ்த்திய பெரியதம்பி தாத்தா.... வாக்கு பலித்த அதிசயம்
prime-minister-light-house-plan-chennai
பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்
singarach-chennai-2-0-football-ground-laid-foundation
“சிங்காரச் சென்னை 2.0” செயற்கை புல் கால்பந்து மைதானம்
new-restriction-imposed-from-tomorrow
இதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா? – புதிய கட்டுப்பாடுகள் என்ன?
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
local-trains-doesn-t-function-from-tomorrow
புறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!

READ MORE ABOUT :