சார் போதும்: மை லார்ட் வேண்டாம்.. ஐகோர்ட் தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி அறிவுரை!

Advertisement

நீதிபதிகளை மை லார்ட், லார்ட்ஷிப் அழைக்கும் முறையை தவிர்க்க உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி அறிவுறுத்தியுள்ளார். விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே திருச்சுழியில் முன்சீப் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்ற திறப்புவிழா நேற்று நடைபெற்றது.

இந்த விழாவில் காணொலி மூலம் சென்னையிலிருந்து தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி நீதிமன்றத்தை திறந்து வைத்தார். தொடர்ந்து, நிகழ்ச்சியில் காணொலி மூலம் உரையாற்றிய தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, காலனித்துவ, நிலப்புரபுத்துவ முறையை குறிக்கும் மை லார்ட், லார்ட்ஷிப் என நீதிபதிகளை அழைக்கும் முறைகளை கைவிடவேண்டும் என்றும் மரியாதை நிமித்தமாக அழைக்கூடிய சார் என்று சொன்னாலே போதும் என்று தெரிவித்தார்.

மேலும், நீதிபதி கூறுகையில், நிலம் மற்றும் நீர்நிலை ஆக்கிரமிப்புகள் தொடர்பான பொதுநல வழக்குகள் அதிகமாக வருகின்றன. நாட்டின் தற்போதைய வளர்ச்சி விகிதத்திற்காக விவசாய நிலங்களை அழிக்கக் கூடாது. அப்படி செய்தால் மக்களின் உணவை பறிக்கும் செயலாக அமைந்துவிடும். நிலம் ஒரு பற்றாக்குறையான பொருளாக மாறிவருகிறது. ஏராளமான காடுகள் அழிக்கப்பட்டுள்ளன. சமீபகாலங்களில் வளர்ச்சிக்காக எடுக்கப்பட்ட வன நிலங்களை திரும்ப ஒப்படைத்து, வன வழித்தடங்களை மீண்டும் உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். கண்ணுக்கு தெரியாத வைரஸ் பலரை மரணத்தில் தள்ளியுள்ள நிலையில், நம் மக்கள் இயற்கையோடு வாழ கற்றுக்கொள்ள வேண்டும் என்றார்.

நீதிமன்றம் மற்றும் சட்டப்பணிகள் ஆணைக்குழுக்கள் மூலம் தீர்வை வழங்கும் நீதிபதிகள், சமூகத்தில் பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு உள்ள அதிகாரம் மற்றும சட்ட உரிமைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் செயல்பட வேண்டும்0 நீதிமன்றத்தை திறந்து வைப்பது குறித்து பெருமை தெரிவிக்கும் அதேவேளையில், சாமானியர்களுக்கு கட்டுமானங்கள் மட்டும் நீதியை வழங்காது. நீதியை நாடுபவர்களுக்கு உகந்ததாகவும், நபர்கள் அதை அணுகுவதற்கு உகந்ததாக இருக்க வேண்டும். நீதிபதிகளின் அணுகுமுறையும் மாற வேண்டும் என்று தெரிவித்தார். இதற்கிடையே,மை லார்ட், லார்ட்ஷிப் அழைக்கும் முறையை தவிர்க்க தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி அறிவுறுத்தியதை அனைத்து தரப்பு வழக்கறிஞர்களும் பாராட்டு தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

Advertisement
மேலும் செய்திகள்
actress-mahalakshmi-s-husband-ravinder-is-in-trouble-again
சிக்கிய பென் டிரைவ்,ஆவணங்கள்... நடிகை மகாலட்சுமியின் கணவர் ரவீந்தருக்கு மீண்டும் சிக்கல்
he-broke-his-promise-so-we-broke-up-ramarajan-open-talk-on-nalini
சத்தியம் செய்ததை மீறினார்... அதனால் பிரிந்தோம்- நளினி குறித்து ராமராஜன் ஓபன் டாக்
hospital-built-by-napoleon-grandfather-greeted-the-boy
நெப்போலியன் கட்டிய மருத்துவமனை... நீ நடப்பாய் சிறுவனை வாழ்த்திய பெரியதம்பி தாத்தா.... வாக்கு பலித்த அதிசயம்
prime-minister-light-house-plan-chennai
பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்
singarach-chennai-2-0-football-ground-laid-foundation
“சிங்காரச் சென்னை 2.0” செயற்கை புல் கால்பந்து மைதானம்
new-restriction-imposed-from-tomorrow
இதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா? – புதிய கட்டுப்பாடுகள் என்ன?
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
local-trains-doesn-t-function-from-tomorrow
புறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!

READ MORE ABOUT :

/body>