சென்னையில் பெட்ரோல் விலை ரூ.91.45 ஆக உயர்வு.. டீசல் விலையும் அதிகரிப்பு..

by எஸ். எம். கணபதி, Feb 16, 2021, 09:28 AM IST

பெட்ரோல், டீசல் விலை கடந்த ஒரு வாரமாகத் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சென்னையில் பெட்ரோல் லிட்டர் ரூ.91.45, டீசல் லிட்டர் ரூ.84.77க்கு விற்கப்படுகிறது.உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் பீப்பாய் விலை 10 டாலருக்கும் குறைவாகப் போய் தற்போது மீண்டும் உயர்ந்து வருகிறது. நேற்று(பிப்.15) பீப்பாய் 61 டாலருக்கு உயர்ந்தது. இதனால், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை ஒரு வாரமாக உயர்ந்து வருகிறது. மேலும், பெட்ரோலுக்கு 61 சதவீதமும், டீசலுக்கு 56 சதவீதமும் வரி விதிக்கப்படுகிறது. மத்திய, மாநில அரசுகள் கூட்டாக இந்த வரிகளை விதிக்கின்றன.

டெல்லியில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 30 காசு உயர்ந்து ரூ.89.29க்கும், டீசல் விலை லிட்டருக்கு 35 காசு அதிகரித்து ரூ.79.70க்கும் விற்கப்படுகிறது. சென்னையில் நேற்று பெட்ரோல், லிட்டர் ரூ.91.19க்கும், டீசல் லிட்டர் ரூ.84.44க்கும் விற்கப்பட்டது. இன்று பெட்ரோல் விலையில் 26 காசுகள் உயர்ந்து ரூ.91.45, டீசல் விலையில் 33 காசுகள் அதிகரித்து ரூ.84.77க்கும் விற்கப்படுகிறது.

You'r reading சென்னையில் பெட்ரோல் விலை ரூ.91.45 ஆக உயர்வு.. டீசல் விலையும் அதிகரிப்பு.. Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை