தலைமை ஆசிரியர் பதவி உயர்வு.. கலந்தாய்வு நடத்த உயர்நீதிமன்றம் தடை

இன்று நடக்க இருந்த தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கான கலந்தாய்வை நடத்தத் தடை விதித்து உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

by Balaji, Feb 20, 2021, 12:16 PM IST

மதுரை ,ராமநாதபுரம் உட்பட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் பலர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தனர்.அதில்,நாங்கள் பதவி உயர்வில் தலைமையாசிரியராக நியமிக்கப்பட்டுள்ளோம். 2020 ஆம் ஆண்டிற்கு நடக்கவேண்டிய பொது மாறுதல் கலந்தாய்வு கொரோனா தொற்று பரவல் காரணமாக நடத்தப்படவில்லை.ஆனால் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு நடத்த தற்போது அரசு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பொது மாறுதல் கலந்தாய்வு நடத்தாமல், பதவி உயர்வுக்கான கலந்தாய்வு நடத்தினால் பலருக்கு உரிய இடம் கிடைக்காத நிலை ஏற்படும். எனவே பதவி உயர்வுக்கான கலந்தாய்வு நடத்தத் தடை விதிக்க வேண்டும்.

பொது மாறுதல் கலந்தாய்வு நடத்திய பிறகு பதவி உயர்வு கலந்தாய்வு நடத்த உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.இந்த மனுவை விசாரித்த நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் மூத்த தலைமை ஆசிரியர்கள் பலர் பொது கலந்தாய்வுக்குக் காத்திருக்கக் கூடிய சூழலில் தற்போது பதவி உயர்வு பெறக்கூடிய தலைமை ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு நடத்துவது ஏற்கக் கூடியது அல்ல என்று கூறிய நீதிபதி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார்.இதுகுறித்து அரசு தரப்பில் பதில் மனுத் தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி வழக்கு விசாரணையைப் பிப்ரவரி 24ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

You'r reading தலைமை ஆசிரியர் பதவி உயர்வு.. கலந்தாய்வு நடத்த உயர்நீதிமன்றம் தடை Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை