தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் அமல் – மக்களே ஜாக்கிரதை…!

Advertisement

கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்தில் இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன.

எந்தெந்த கட்டுப்பாடுகள் இன்று முதல் கடைபிடிக்க வேண்டும் என்பதை பார்க்கலாம்…

தமிழ்நாடு அரசின் புதிய விதிமுறைகள் காரணமாக, வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வர இ-பாஸ் வாங்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களுக்கு இடையிலான அரசு , தனியார் பேருந்துகள், மாநகரப் பேருந்துகளில் உள்ள இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதி; நின்று கொண்டு பயணம் செய்ய அனுமதி இல்லை.

வாடகை கார்களில் ஓட்டுநர் தவிர்த்து 3 பேர் மட்டுமே பயணிக்க வேண்டும், ஆட்டோக்களில் ஓட்டுநர் தவிர்த்து இருவர் மட்டுமே பயணிக்க வேண்டும்.

அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் திருவிழா, மதம் சார்ந்த கூட்டங்கள் நடத்த இன்று முதல் அனுமதி இல்லை.

அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் இரவு 8 மணி வரை மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி.

திருவிழாக்கள் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

சென்னை கோயம்பேடு உட்பட தமிழ்நாட்டில் அனைத்து பெரிய காய்கறிச் சந்தைகளிலும் சில்லரை வியாபார கடைகள் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது.

காய்கறிக் கடைகள், பல சரக்கு கடைகள், வணிக வளாகங்கள், நகை, ஜவுளிக் கடைகள் , ஷோரூம்கள் 50 விழுக்காடு வாடிக்கையாளர்களுடன் இரவு 11 மணி வரை செயல்படலாம்.

உணவகங்கள் தேநீர் கடைகளில் 50 விழுக்காடு இருக்கைகளுடன் இரவு 11 மணி வரை அமர்ந்து உணவருந்தலாம்.

உணவகங்களில் இரவு 11 மணி வரை பார்சல் சேவையை தொடரலாம்.

திரையரங்குகளிலும் 50 சதவிகித இருக்கைகளை நிரப்ப மட்டுமே அனுமதி.

உள் அரங்குகளில் 200 நபர்களுக்கு மிகாமல் அரசியல், கல்வி, கலாச்சார நிகழ்வுகளை நடத்திக்கொள்ளலாம்.

திருமண விழாக்களில் 100 பேருக்கு மிகாமலும், இறுதி ஊர்வலங்களில் 50 பேருக்கு மிகாமலும் மட்டுமே பங்கேற்க வேண்டும்.

பார்வையாளர்கள் இன்றி விளையாட்டுப் போட்டிகளை நடத்த அனுமதி.

இந்த புதியக் கட்டுப்பாடுகளை பொதுமக்கள் முறையாக பின்பற்ற வேண்டும் என அரசு கேட்டுக்கொண்டுள்ளது. இதனை மக்கள் கடைபிடிக்காவிட்டால் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

Advertisement
மேலும் செய்திகள்
actress-mahalakshmi-s-husband-ravinder-is-in-trouble-again
சிக்கிய பென் டிரைவ்,ஆவணங்கள்... நடிகை மகாலட்சுமியின் கணவர் ரவீந்தருக்கு மீண்டும் சிக்கல்
he-broke-his-promise-so-we-broke-up-ramarajan-open-talk-on-nalini
சத்தியம் செய்ததை மீறினார்... அதனால் பிரிந்தோம்- நளினி குறித்து ராமராஜன் ஓபன் டாக்
hospital-built-by-napoleon-grandfather-greeted-the-boy
நெப்போலியன் கட்டிய மருத்துவமனை... நீ நடப்பாய் சிறுவனை வாழ்த்திய பெரியதம்பி தாத்தா.... வாக்கு பலித்த அதிசயம்
prime-minister-light-house-plan-chennai
பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்
singarach-chennai-2-0-football-ground-laid-foundation
“சிங்காரச் சென்னை 2.0” செயற்கை புல் கால்பந்து மைதானம்
new-restriction-imposed-from-tomorrow
இதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா? – புதிய கட்டுப்பாடுகள் என்ன?
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
local-trains-doesn-t-function-from-tomorrow
புறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!

READ MORE ABOUT :

/body>