சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு கைமீறி சென்றுவிட்டதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது என செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால் இதன் உண்மை நிலவரம் குறித்து பார்ப்போம்.
இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தொடங்கி பரவி வருகிறது. நாளுக்கு நாள் இதன் பாதிப்பு அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் நேற்று ஒரேநாளில் கொரோனா பாதிப்பு 8 ஆயிரத்தை நெருங்கியது. முக கவசம், பாதுகாப்பான இடைவெளி உள்ளிட்ட கட்டுபாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில் சென்னை தலைமை உ யர்நீதிமன்றத்தில் நீதிபதி அமர்வில் வழக்கு ஒன்றின் விசாரணைக்காக ஆஜராகியிருந்த தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணன், கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவிவரும் நிலையில், கடந்த அண்டைவிட மோசமாக இருப்பதாக தெரிவித்தார். கொரோனா கட்டுப்பாடுகள் விவகாரத்தில் நீதிமன்றங்களில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து ஆலோசனைகள் எதுவும் உள்ளதா என்று தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி விளக்கம் கோரினார்.
இதுதொடர்பாக கொரொனாவின் இராண்டாவது அலையை முற்றிலும் கட்டுப்பாட்டை மீறிவிட்டதாக அரசு தலைமை வழக்கறிஞர் உயர்நீதிமன்றத்தில் கூறியதாக தகவல் வெளியானது. நீதிமன்றத்திற்கு விளக்கம் அளிக்க சுகாதாரத் துறை செயலாளர்தான் சரியான நபர் என்பதால், அவரை நீதிமன்றம் வரச்சொல்வதாக தெரிவித்தார்.
இதனை ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதி இன்று மதியமே சந்திப்பதாக தெரிவித்துள்ளார். இந்த செய்தி வைரலாக பரவி வருகிறது. ஆனால், கொரோனா தமிழக அரசு கட்டுபாட்டை மீறி சென்றுவிட்டதாக கூறியது தவறாக புரிந்துகொள்ளப்பட்டதாகவும், இந்திய அளவில் கொரோனா கைமீறி சென்றுவிட்டதாக தான் தலைமை வழக்கறிஞர் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.