நாளை மறுநாள் முதல் 3 ஆம் ம் கட்ட தடுப்பூசி திட்டம் - 1.5 கோடி தடுப்பூசிகள் கொள்முதல்

by Ari, Apr 29, 2021, 06:29 AM IST

தமிழகத்தில் மே 1 ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கப்பட உள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான பணிகளில் தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்:-

“இந்தியாவிலேயே அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என ஏற்கனவே அறிவித்த முதல் மாநிலம் தமிழ்நாடு. கொரோனா நோய்த்தொற்றுப் பரவல் அதிகரித்து வரும் நிலையில், அதனை கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணிகள் தமிழ்நாடு அரசால் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது 45 வயதுக்கு மேற்பட்ட நபர்களுக்கு செலுத்தப்பட்டு வரும் இலவச தடுப்பூசி பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த 27-ந் தேதி வரை 55.51 லட்சம் நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மேலும், வரும் மே 1-ந் தேதி முதல் 18 வயதுக்கு மேல் 44 வயது வரை உள்ளவர்களுக்கு ஏற்கனவே அறிவித்தவாறு, இலவசமாக தடுப்பூசி போட்டுக்கொள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் உத்தரவின்பேரில் தேவையான முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கென, முதல் கட்டமாக 1.5 கோடி தடுப்பூசிகள் தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகம் மூலமாக கொள்முதல் செய்து வழங்குவதற்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You'r reading நாளை மறுநாள் முதல் 3 ஆம் ம் கட்ட தடுப்பூசி திட்டம் - 1.5 கோடி தடுப்பூசிகள் கொள்முதல் Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை