குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வதற்காக இன்று சென்னை வருகிறார். இதனால், சென்னையில் சுமார் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு உள்ளனர்.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்து இன்று காலை 10.45 மணிக்கு சென்னை வருகிறார். அங்கிருந்து ராணுவ ஹெலிகாப்டர் மூலம் வேலூரில் உள்ள சிஎம்சி மருத்துவமனை மருத்துவக் கல்லூரி நூற்றாண்டு விழா, ஸ்ரீபுரம் ஸ்ரீ நாராயணி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் சிறுநீரக மாற்று மற்றும் இருதய அறுவை சிகிச்சை பிரிவு தொடக்க விழாவில் பங்கேற்கிறார். பின்னர், ஸ்ரீலட்சுமி நாராயணி தங்கக்கோவிலுக்கு சென்று தரிசனம் செய்கிறார்.
பின்னர், வேலூரில் இருந்து ராணுவ ஹெலிகாப்டர் மூலம் இன்று மாலை 5.40 மணிக்கு குடியரசுத் தலைவர் சென்னை திரும்புகிறார். சென்னை, கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகைக்கு செல்லும் அவர், அன்றிரவு முக்கிய பிரமுகர்களை சந்திக்கிறார்.
இதைதொடர்ந்து, சென்னை பல்கலைக்கழகத்தில் நாளை நடைபெறவுள்ள 160வது பட்டமளிப்பு விழா, வேளச்சேரி குருநானக் கல்லூரியில் கட்டிய அரங்குகள் திறப்பு விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்கிறார். இதன்பிறகு, மதியம் 1 மணியளிவில் குடியரசுத் தலைவர் டெல்லிக்கு திரும்புகிறார்.
குடியரசுத் தலைவரின் வருகையை ஒட்டி சென்னையில் 7 அடுக்கு பாதுகாப்பு போடப்படுகிறது. சுமார் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.