தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தேர்தலில் முறைகேடு நடந்திருப்பதாக வழக்கறிஞர்கள் குழுவினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார்கவுன்சில் தேர்தல் கடந்த மார்ச் 28-ஆம் தேதி நடந்தது. இந்த தேர்தலில் முறைகேடு நடந்திருப்பதாக வழக்கறிஞர் குழுவினர் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பின்போது பேசிய வழக்கறிஞர்கள் குழுவினர், "இந்த தேர்தல் உடனடியாக ரத்து செய்யப்பட வேண்டும். நியாயமான நேர்மையான அதிகாரிகளை கொண்டு தேர்தலை மீண்டும் நடத்த வேண்டும்" என வலியுறுத்தினர்.
“இந்த தேர்தல் முறைகேடுகளுக்கு காரணமாக இருந்த அகில இந்திய பார் கவுன்சில் இணை தலைவர் (co chairman) பிரபாகரன் பதவி விலக வேண்டும். முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் மீது அகில இந்திய பார் கவுன்சில் நடவடிக்கை எடுக்க வேண்டும்." என வழக்கறிஞர்கள் கூறினர்.