துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மீது சொத்து குவிப்பு புகார்

Advertisement

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக துணைமுதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வழக்கு பதிவு செய்யுமாறு லஞ்ச ஒழிப்பு துறைக்கு உத்தரவிடக் கோரி திமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

O. Panneerselvam

ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக திமுக அமைப்பு செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.எஸ்.பாரதி லஞ்ச ஒழிப்பு துறையில் கடந்த மார்ச் 10-ஆம் தேதி புகார் கொடுத்தார்.

இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், துணை முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம், அவரது மனைவி விஜயலட்சுமி, மகன்கள் ரவீந்திரநாத், ஜெயபிரதீப், மகள் கவிதாபானு மற்றும் சகோதரர்கள் பெயரில் சொத்துக்களை வாங்கி குவிக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் வருமானம் குறித்த தவறான தகவல்களை தேர்தல் வேட்புமனுக்களில் கொடுத்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், அமெரிக்கா, துருக்கி, இந்தோனேசியா போன்ற வெளி நாடுகளில் உள்ள நிறுவனங்களிலும், இந்திய நிறுவனங்களிலும் பன்னீர்செல்வத்தின் வாரிசுகள் கோடிக்கணக்கான ரூபாய் முதலீடு செய்துள்ளதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், 2011-ஆம் ஆண்டு தேர்தலில் மனைவிக்கு 24.20 லட்ச ரூபாய் சொத்துக்கள் இருப்பதாக குறிப்பிட்ட பன்னீர்செல்வம், 2016-ஆம் ஆண்டில் 78 லட்ச ரூபாய்க்கு சொத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

சேகர் ரெட்டியின் டைரியில் பன்னீர்செல்வத்துக்கு தொடர்பிருப்பதாக குறிப்பிட்டுள்ளதாகவும் 6 மாதங்களில் அவரிடம் 4 கோடி ரூபாய் பணம்பெற்றுள்ளதாக டைரியில் குறிப்பிட்டுள்ளதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய புகார் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிடவேண்டும் என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement
மேலும் செய்திகள்
actress-mahalakshmi-s-husband-ravinder-is-in-trouble-again
சிக்கிய பென் டிரைவ்,ஆவணங்கள்... நடிகை மகாலட்சுமியின் கணவர் ரவீந்தருக்கு மீண்டும் சிக்கல்
he-broke-his-promise-so-we-broke-up-ramarajan-open-talk-on-nalini
சத்தியம் செய்ததை மீறினார்... அதனால் பிரிந்தோம்- நளினி குறித்து ராமராஜன் ஓபன் டாக்
hospital-built-by-napoleon-grandfather-greeted-the-boy
நெப்போலியன் கட்டிய மருத்துவமனை... நீ நடப்பாய் சிறுவனை வாழ்த்திய பெரியதம்பி தாத்தா.... வாக்கு பலித்த அதிசயம்
prime-minister-light-house-plan-chennai
பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்
singarach-chennai-2-0-football-ground-laid-foundation
“சிங்காரச் சென்னை 2.0” செயற்கை புல் கால்பந்து மைதானம்
new-restriction-imposed-from-tomorrow
இதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா? – புதிய கட்டுப்பாடுகள் என்ன?
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
local-trains-doesn-t-function-from-tomorrow
புறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!
/body>