தினகரனுக்கு வாக்களிக்க கோரிய பாஜக மூத்த தலைவர்!

ஆர்.கே.நகர் தேர்தலில் தமிழர்கள் டிடிவி தினகரனுக்கு வாக்களிக்க வேண்டும் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி தெரிவித்துள்ளார்.

Subramanian swamy, TTV Dinakaran

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவை அடுத்து, அவர் போட்டியிட்டு வெற்றிபெற்ற ஆர்.கே.நகர் தொகுதிக்கு வரும் டிசம்பர் 21 அன்று இடைத்தேர்தல் நடைப்பெறவுள்ளது. முன்னதாக கடந்த ஏப்ரல் 12-ஆம் நாள் இந்த தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு பின்னர், தேர்தல் விதி மீறு வேட்பாளர்கள், வாக்காளர்களுக்கு பணப்பட்டுவடா செய்ததால் இந்த தேர்தல் நிறுத்தப்பட்டது.

அதன் பின்னர் வரும் டிசம்பர் 21-ஆம் நாள் மீண்டும் இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவித்து அதற்கான ஏற்பாடுகள் நடைப்பெற்று வருகிறது. இன்று மாலை 5 மணியோடு இந்த இடைத்தேர்தலுக்கான பிரசாரம் முடிவடைகிறது.

.ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் டிசம்பர் 21ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில் அதிமுக வேட்பாளராக மதுசூதனனும், திமுக சார்பில் மருதுகணேஷும், சுயேட்சை வேட்பாளராக டிடிவி தினகரனும் முக்கியத்துவம் வாய்ந்தவர்களாக இருக்கின்றனர்.

இந்நிலையில் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி, ‘சில பாஜக ஆர்வலர்களிடம் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் களத்தில் இருக்கும் களநிலவரம் பற்றி கேட்டறிந்தேன். திமுக - தினகரனுக்கு இடையே கடும் போட்டி நிலவுவதாக தெரிவித்தார்கள். அப்படியென்றால், தமிழர்கள் தினகரனுக்குத்தான் வாக்களிக்க வேண்டும்’ என பதிவிட்டுள்ளார்.